மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 28 ஜன 2020

ஜனாதிபதி வேட்பாளர்: நம்பிக்கையும் ஆலோசனையும்

ஜனாதிபதி வேட்பாளர்: நம்பிக்கையும் ஆலோசனையும்

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக இன்று (19. 6. 2017) பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறும் போது, “ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்த், மிகச்சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார். ராம்நாத்கோவிந்த் விவசாயிகளின் மகனாக ஏழைகளுக்காகக் குரல் கொடுப்பார். ஏழை எளிய மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் ராம்நாத்கோவிந்த். மிகச்சிறந்த ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் விளங்குவார் என உறுதியளிக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

பாஜக ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்ட மறுகணம் தந்தி தொலைக்காட்சி பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை

சௌந்தரராஜனைத் தொடர்பு கொண்டு அவரது கருத்தினை கேட்டார்கள். அப்போது பேசிய அவர், “மிகச் சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை பாரதிய ஜனதா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அறிவிப்பாக இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய ஒரு தலைவரை பாஜக ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை பாஜக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பது தெளிவாகிறது. தலித் பின்னணியைக் கொண்ட ராம்நாத் கோவிந்த் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தொடர் தொண்டாற்றியவர். நிச்சயம் எதிர்கட்சித் தலைவர்கள் முதல் அனைவரும் பாஜக வேட்பாளரை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதிலும் எதிர்கட்சிகள் குறை கூறினால் அவர்கள் இதிலும் அரசியல் செய்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். எனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

எதிர்கட்சிகள் ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை பாஜக அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கூறும்போது, “ எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தை எட்ட பாஜக தவறிவிட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் 22ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பாஜக அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதா அல்லது பொது வேட்பாளரை அறிவிப்பதா என்பது முடிவாகும்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon