மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

கலப்பட பால் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

கலப்பட பால்  அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பால் கம்பெனியினர் தரும் பெரும்பாலான பாலில் கலப்படம் இருப்பது வேதனையளிக்கிறது என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கலப்பட பால் குறித்து, சிலர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த கலப்பட பால் வழக்கில்,கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை பயன்படுத்தப்பட்ட 886 பால் மாதிரிகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு இன்று (ஜூன் -19) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

மேலும் இது தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் ஒட்டுமொத்த அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ' தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, ஆவின் பால் உள்ளிட்ட 886 பால் மாதிரிகளும், சில பால் பொருட்களின் மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 187 பால் மாதிரிகளும், 57 பால் பொருட்களின் மாதிரிகளும் மிகவும் தரம் குறைவாக கலப்படமாக இருந்தது. மேலும் அவை எங்கு பெறப்பட்டவை, அவற்றின் பெயர்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது' எனக்கூறப்பட்டுள்ளது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon