மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை !

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை !

ரேன்சம்வேர் என்ற வைரஸின் தாக்கம் சமீபத்தில் பல்வேறு நாடுகளிலும் இருந்தது. அதன்படி இந்தியாவிலும் அதன் தாக்கம் பெரிதளவு காணப்பட்டது. ஆனால் ரேன்சம்வேர் என்ற ஒரே ஒரு வைரஸ் மட்டும் தான் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை ஆராய்ந்தால் இல்லை என்றே கூறலாம். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் xavier என்ற ஒரு வைரஸ் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் நபர்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் தகவல்களைத் திருடி வருகிறது.

அதன்படி தற்போது ஆன்ட்ராய்டு ஃபிளே ஸ்டோரில் இருக்கும் பல லட்சம் அப்ளிகேஷன்களில் 800-க்கும் அதிகமான xavier வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்கள் உள்ளதாகவும், அவற்றில் இதுவரை 75 அப்ளிகேஷன்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், Trend Micro என்ற ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த xavier வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் wallpaper அப்ளிகேஷன், டிசைன் அப்ளிகேஷன், ரிங்டோன் அப்ளிகேஷன் போன்றவரின் மூலம் பரவி வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த xavier வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தெற்காசிய நாடுகள், இந்தோனேசியா, வியட்நாம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதற்கு மாற்றுவழியாக, அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் அப்ளிகேஷன்களை மட்டும் பயன்படுத்துவது நல்லது என்ற தகவலையும் Trend Micro நிறுவனம் அறிவித்துள்ளது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon