மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை!

ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை!

வெளிநாடுகளிலிருந்து முறையாக அனுமதி பெறாமல் பணம் பெற்றதாக சிபிஐ சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டுகால சிறை தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து அனுமதியில்லாமல் 1.54 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்ததாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி கடந்த 2011 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா மேல்முறையீடு செய்தார்.

இந்த சூழ்நிலையில், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு இன்று ஜூன் 19 ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில் 'எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து' சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon