மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

விதார்த்துக்கு மனைவி கொடுத்த பரிசு!

விதார்த்துக்கு மனைவி கொடுத்த பரிசு!

நடிகர் விதார்த் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, நல்ல மனிதர். தனிப்பட்ட வாழ்க்கையில் அல்ல. சினிமாவிலும்கூட நல்ல கதையம்சமுள்ள படங்களை ரசிகர்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால்தான் சமீபத்தில் வெளியான ஒரு கிடாயின் மனு திரைப்படத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கவும் தயார் என்று கூறியிருந்தார்.

தனது ரசிகர்களின்மீது இத்தனை அக்கறைகொண்ட விதார்த்துக்கு இன்று(19.06.17) மகிழ்ச்சியான நாள். விதார்த்தின் மனைவி காயத்ரி, பழனியிலுள்ள மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விதார்த்துக்கு பணத்தை சேர்க்கவில்லையே தவிர, புகழை சேர்ந்திருக்கிறது. அதேசமயம், பெண் குழந்தையையும் பெற்றெடுத்து இரண்டு மடங்கு மகிழ்ச்சியை விதார்த்துக்குக் கொடுத்திருக்கிறார், அவரது மனைவி காயத்ரி தேவி.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon