மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சிரிக்காமல் படிக்கவும் - பா.ஜ.க செக்யூலரிசக் கட்சி - அப்டேட் குமாரு!

சிரிக்காமல் படிக்கவும் - பா.ஜ.க செக்யூலரிசக் கட்சி - அப்டேட் குமாரு!

என்னண்ணே ஒரே டென்ஷனா இருக்கீங்க? இந்தியா தோத்துருச்சுன்னு கவலையாண்ணே? அட அதில்லைடா குமாரு. பாகிஸ்தான் ஜெயிச்சிருச்சே. ஆமாண்ணே, தோக்கடிச்சவங்க கிட்டவே இந்த கோலி, தோணியெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்.... அடேய், அது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்டா. வீரன்னா அப்டித்தான் இருக்கணும். அப்ப நாம வீரன் இல்லையாண்ணே. ஏண்டா இல்லை. தலித்தை குடியரசுத் தலைவரா முன்மொழிஞ்சிருக்கோமே... தலித்துன்னு குறிப்பிட்டு சொல்லும்போதே விளம்பரத்துக்காக செஞ்ச வேலைன்னு தெரியுதேண்ணே... இதனாலதான் நானெல்லாம் கலாய்க்கிற மாதிரி ஆகிடுது. இனி என்னைத்தவிர அண்ணனை யாரும் கிண்டல் பண்ணக்கூடாது. சிரிக்காம அப்டேட்டைப் படிங்க.

Theesan Ramanathan

நாய் புடிக்கிற வண்டிய வச்சி நாய புடிக்க முடியாது, புடிச்ச நாய அடைச்சு வைக்க மட்டுமே முடியும்.! இந்த உண்மையை நீங்கள் உணர்ந்துகொண்டால் இந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் அனைத்து நாளும் ஒரு இனிய நாளே.

லொல் லொல்ல்..,

Sakthi Saravanan

பாகிஸ்தான் விர்ர்ர்ர்ர், இந்தியா கொர்ர்ர்ர், இந்திய ரசிகர்கள் கிர்ர்ர்ர் - தினமலர்

நான் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேசுகிறேன் - விகடன்

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோற்கவில்லை. பாகிஸ்தான் ஜெயித்திருக்கிறது அவ்வளவே. Bcoz the supreme court has clearly stated India can't lose a cricket match to Pakistan. இந்தியா தோக்கலைங்கறன் - எச்.ராஜா

பாகிஸ்தான் ஜெயித்தது அவர்கள் சொந்தக்கருத்து. இது பற்றி திமுக பேச தகுதியில்லை - தமிழிசை

நாஞ்சில் சம்பர் யார்? அவர் பார்த்த மேட்ச் எப்படி செல்லுபடியாகும்? - கே.பி.முனுசாமி

பாகிஸ்தான் ஜெயிச்சிடிச்சா? போனை வை டா ங்கோத்தா - செந்தமிழன் சீமான்

இந்தியா ஏன் தோற்றது? அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் - குட்டிம்மா தீபா

ஆக இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஆக, இந்தியாவுக்கு ஸ்வாக - மு.க.ஸ்டாலின்

இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - அமைச்சர் ஜெயகுமார்

எல்லாம் பொறுக்கிஸ். ட்ரம்ப் நேத்தே சொன்னா, மல்லக்க படுத்தா எரும மாடு, மேட்சுல தோற்க போற தடிமாடுனு - சூ.சாமி

Bala Salem

நம்மூர் சினிமாக்கள்ல பார்த்தீங்கன்னா... தீவிரவாதிகள பூரா முஸ்லீமா காட்டிட்டு, அவங்கள எதிர்க்கற போலீசு ஒருத்தரையும் முஸ்லீமா காட்டி பேலன்ஸ் பண்ணுவாங்க !

அதுபோல... மாட்டுக்கறி விஷயத்தில் தலித்களை கார்னர் பண்ணிட்டு..... அய்யயோ நாக்கு ரோலிங் ஆகுதே... சரி விடுங்க வேண்டாம்...

ஆதிரா ஆனந்த்

என்னய்யா! மாட்டுக்கறி சாப்பிடுற பயலுக தோக்கடிச்சுப்புட்டானுக?

Kartiktweaks

எங்க அதிகமா ரன் அடிச்சா GST போடுவானுகளோனு பயந்துட்டு தான் இந்தியன் பிளேயர்ஸ் அவுட் ஆனாங்களாம்..😁😁

நா. சரத்குமார்

பனை மரத்துல இறக்கலாம் கள்ளு

நீ பண்ணாதடி என்கிட்ட லொள்ளு ...

Hansa Hansa

வேட்பாளரை இஸ்லாமியர், தலித் எனக் குறிப்பிட்டுச் சொல்வதிலிருந்தே அவர்கள் எவருமே இயல்பாக தேர்வாகவ்ில்லை, அந்த் சூழலும் வரவில்லை என்று தெரிகிறது.

*சமத்துவம் எனும் மாயை.

ரா புவன்

தம்பி, இது புனித ரமலான் மாசம், அதான் நீங்க ஜெயிச்சிட்டீங்க. இதே எண்ணத்தோட ஆடி மாசம் வந்து எங்ககிட்ட மோதிடாதீங்க, அப்ப நாங்க ரொம்ப உக்கிரமா இருப்போம்.

Theesan Ramanathan

ஜெயிச்சா பரிசும் பவுசும் BCCI க்கு

தோத்தா பழி இந்தியாவுக்கு!

இது எந்தூர் நாயங் மச்சான்?.,,

Prince Ennares Periyar

நேத்து ஒரு விக்கெட் எடுத்ததுக்கு பாரத் மாதா கீ ஜே-ன்னு ஒருத்தரு கத்துனாராமே! தோத்ததுக்கு பாரத் மாதா கோஷம் என்ன போட்டாராம்?

Infant

வைகோ எதும் மேட்சு பாக்குறாறா

தயவு கொஞ்சம் டிவி ஆப் பன்னிட்டு தூங்க சொல்லுங்க

palanikannan04

தமிழகத்தில் அனைத்து மேல்நிலைபள்ளிகளிலும் வை-ஃபை வசதி-செய்தி

பள்ளிகள்ல மொபைல் யூஸ் பண்ண தடை இருக்கு

"தட் பல்லு இல்லாதவனுக்கு பக்கோடா மொமண்ட்"

Endhirapulavan

அரசு மேல்நிலை பள்ளிகளில் இலவச வைஃபை வசதி-செங்கோட்டையன்

அப்பாடா இதுக்காச்சும் பசங்க ஸ்கூலுக்கு கட் அடிக்காம போவானுவ

Kozhiyaar

ரசம் சூப்பரா இருக்கே, யாரு கொடுத்தா!?

ஐய்யயோ, ஏன் முறைக்கிறா!?

இன்னும் இரண்டு நாளைக்கு தயிர் சோறு தானா!!!

CreativeTwitz

ஒரு இடத்துக்கு வரச்சொல்லி,போன்ல அட்ரஸும் ரூட்டும் சொல்லி புரிய வைக்கிறதுக்கு பதிலா நேர்லயே கையைப்பிடிச்சு கூட்டிட்டு வந்துடுறது சுலபமான வேலை

Kozhiyaar

முடி வெட்டும் கடைகளை விட, முடி ஒட்டும் கடைகள் அதிகமாகி விட்டன!!

Kartiktweaks

யேன்டா பாண்டியாவ அவுட் ஆகாம இருந்துருந்தா கூட எங்க கோபம் கொறஞ்சுருக்கும்..அவனையு ரன் அவுட் பண்ணிட்டு....

CreativeTwitz

தம்பி நாம மோசம் போய்ட்டோம்பா

ஆமான்னே மேட்ச் பிக்சிங்மாதிதா தெரிது

அது இல்லப்பா அந்த புள்ள கிரவுண்டுக்கு வரவே இல்ல

// இவனுங்கள வச்சிகிட்டு

Kannan_Twitz

விட்றா விட்றா வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்!!

அப்பறம் ஏன்டா கண்ணுல தண்ணி வருது?

அது வலி அதர் டிபார்ட்மென்ட்!!

INDvsPAK

CT17

Kartiktweaks

டேடேய் இப்போ என்னடா கேட்டேன்

நேத்து இந்தியா தோதுச்சே இத மோடி தனது சாதனை பட்டியல்ல சேத்துப்பாரானு தானே கேட்டேன்

இதுக்கு போய் கல்ல எடுக்குற

CreativeTwitz

சம்பாதிக்கிறதவிட, செலவு பண்ண அதிகமா யோசிக்கிறவங்ககிட்டேதான் நிறைய பணம் சேரும்.

Karthick Krishna

சரி, இப்ப 'தனி ஒருவன்' modeக்கு போவோம்... :P

எப்பல்லாம் இந்தியா ஒரு ஐசிசி கப் வின் பண்ணுதோ, அதுக்கு அடுத்து பாகிஸ்தான் வின் பண்ணும். பண்ணியே ஆகனும்.

83 வேர்ல்ட் கப் - இந்தியா,

அடுத்த எடிஷன் 87

சரி சரி, மாத்திட்டேன், 92 - பாகிஸ்தான்

2007 டி20 வேர்ல்ட் கப் - இந்தியா,

அடுத்த எடிஷன் 2009 - பாகிஸ்தான்.

போன சாம்பியன்ஸ் டிராபி ஜெயிச்சது இந்தியா,

அப்போ இந்த எடிஷன்? புரியுதா?

இதுக்கெல்லாம் காரணம் என்ன?

நமக்கு சுதந்திரம் கிடைச்சது வெள்ளைக்காரன் கிட்டேர்ந்து.

கிரிக்கெட்டை கண்டுபிடிச்சது வெள்ளைக்காரன்.

சுதந்திரம் கொடுக்கும் போதே இந்தியா - பாகிஸ்தான்னு பிரிச்சு தான் கொடுத்தான்.

அப்பவே நேருவுக்கும், மவுண்ட்பேட்டனுக்கும், ஜின்னாவுக்கும் நடுவுல ஒரு ஒப்பந்தம்.

எதிர்காலத்துல கிரிக்கெட்ல இந்தியா வெற்றியடைஞ்சாலும் அது பாகிஸ்தானுக்கும் சரிசமமா பிரிச்சு தரப்படும்னு.

ஒரே எடிஷன்ல ரெண்டு வின்னர் இருக்க முடியாது இல்லையா. அதான், அடுத்தடுத்த எடிஷன்ல..

இப்பவாவது புரியுதா இளைஞர்களே 5ஆம் பக்கத்துக்கும், 10ஆம் பக்கத்துக்கும் இருக்கற ஒற்றுமை..

இனி பொங்கியெழ வேண்டமா?

பொங்கல் சாப்பிட வேண்டாமா?

ஐயகோ !!

-லாக் ஆஃப்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon