மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 22 ஜன 2021

பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த ராம் நாத் கோவிந்த்

பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த ராம் நாத் கோவிந்த்வெற்றிநடை போடும் தமிழகம்

பீகார் மக்களின் தொடர் ஆதரவுக்கு பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான பாஜக தரப்பு வேட்பாளரை முடிவு செய்ய ஜூன் 19-ம் தேதி பாஜக ஆட்சிமன்றக்குழு டெல்லியில் இருக்கும் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு பீகார் ஆளுநரான ராம் நாத் கோபால் பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

எதிர்கட்சிகளிடம் ராம் நாத் கோவிந்துக்கு பாஜக தரப்பில் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை செய்த பிறகு காங்கிரஸ் தன் அறிவிப்பை வெளியிடும் என காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ராம் நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருக்கும் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிறகு பாஜக ஜனாதிபதி வேட்பாளரும், பீகார் ஆளுநருமான ராம் நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டார். பீகார் தலைநகர் பாட்னாவில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் இருந்து ராம் நாத் கோவிந்த் டெல்லி புறப்படுகையில், “பீகார் மக்களின் தொடர் ஆதரவுக்கு நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

டெல்லிக்கு புறப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon