மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வரும் Mr.India!

30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வரும்  Mr.India!

கடந்த 1987ஆம் ஆண்டு அனில் கபூர் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற Mr.India திரைப்படம் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இயற்றப்படுகிறது.

தற்போது மாம் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் பிசியாக இருக்கும் ஸ்ரீதேவி, Mr.India திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக deccan chronicle நாளிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய இந்த திரைப்படத்தை இயக்கிய சேகர் கபூர் இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தார். அதனால் தற்போது ஒரு புதிய இயக்குநருடன் இந்த திரைப்படம் இயற்றப்படவுள்ளது. மாம் திரைப்படம் அடுத்த மாதம் (ஜூலை) வெளியான பின்னர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அனில் கபூர் மற்றும் ஸ்ரீதேவி மட்டுமின்றி, அனில் கபூரின் மகன் ஹர்ஸ்வரதன் கபூர் இந்த திரைப்படத்தின் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், மற்றொரு முன்னணி கதாபாத்திரம் யார் என விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1987ஆம் ஆண்டு வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த Mr.India திரைப்படம் மீண்டும் வெளியாகி வரவேற்பு பெறுமா என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon