மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

கொள்கை இல்லாத கட்சி காங்கிரஸ் : அமித்ஷா

கொள்கை இல்லாத கட்சி காங்கிரஸ் : அமித்ஷா

சுதந்திரத்திற்குப் பிறகு கொள்கை ஏதுமின்றி காங்கிரஸ் கட்சி வெற்று அரசியல் செய்து வருவதாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக-வினர் தயாராகும் வண்ணம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளையும்,தொண்டர்களையும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து வருகிறார். இதேபோல மகாராஷ்டிர மாநிலத்திலும் சுற்றுப்பயணம் செய்த அமித்ஷா,ஜூன் 18 ஆம் தேதி மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,'சுதந்திரம் பெறுவதற்காக இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த கட்சியே காங்கிரஸ். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற இந்திய மக்கள் பயன்படுத்திய ஒரு சிறப்பு வாகனமாகவே காங்கிரஸ் கட்சி இருந்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு அதனுடைய பயன்பாடு முடிவடைந்துவிட்டது. எனவே தற்போது எந்த கொள்கையுமின்றி ஒரு வெற்று அரசியலை காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியில் வசதியானவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். அங்கே குடும்ப ஆட்சி நடக்கிறது. ஆனால் பாஜகவில் ஒரு டீக்கடைக்காரர் பிரதமராக வர முடிகிறது. கடைநிலை தொண்டனும் இங்கு உயர்பதவிக்கு வரலாம்' என்று தெரிவித்தார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon