மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

மாநகரம் இயக்குநரின் அடுத்தப்படம் எப்படி இருக்கும்?

மாநகரம் இயக்குநரின் அடுத்தப்படம் எப்படி இருக்கும்?

மாநகரம் திரைப்படம் வெளியாகும் வரை, ரசிகர்களிடத்தில் அத்தனை எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், படம் பார்த்தவர்களெல்லாம் புகழப்புகழ படத்தின் திரையிடும் அளவு பெரிதானது. அதில் நடித்திருக்கும் நடிகர்கள் பேசப்பட்டனர். இயக்குனர் பாராட்டப்பட்டார்.

மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதுமுகம் என பலரும் அறிந்தனர். அந்த கனகராஜின் அடுத்தப்படம் எப்படி இருக்கும்? அவரை நமது பேனரில் படம் பண்ண வைக்கலாமா? எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலரும் யோசித்தனர். ஆனால், லோகேஷ் கனகராஜுக்கு முதல் வாய்ப்பு கொடுத்து மாநகரம் என்ற சிறந்த படைப்பைக் கொடுத்த எஸ்.ஆர்.பிரபுவின் பொடன்ஷியல் ஸ்டூடியோஸுக்குத் தான் அடுத்த படத்தை இயக்குகிறார் லோகேஷ்.

மாநகரம் திரைப்படத்தைப்போல வாழ்வியலையும், சமூகத்தால் பாதிக்கப்படும் அல்ல சமூகத்தின் அழுகிய கிளைகளை வெட்டி சரிசெய்யும் சாமான்யனின் கதையாக, லோகேஷின் அடுத்தப்படம் இருக்கப்போவதில்லை. மாறாக, சூப்பர் நேச்சுரல் எனப்படும் அமானுஷ்ய சக்தியைப்பற்றிய கதையை லோகேஷ் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்தப்படத்தை ஒரு பெரிய ஹீரோவுக்கான படமாக எடுக்கத் திட்டமிட்டு கதையமைக்கச் சொல்லியிருக்கிறார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon