மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

பஸ்ஸில் சிக்கிய வெளிநாட்டுப்பணம்!

தமிழக - கேரள எல்லையான, குமரி மாவட்டம் அமரவிளையில் உள்ள சோதனைச் சாவடியில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கரன்சிகள் கட்டுக்கட்டாக பிடிபட்டன.

இதை கானா நாட்டைச் சேர்ந்த, ஒரு வாலிபர் கொண்டு வந்திருக்கிறார். அவர் பெங்களூருவில் இருந்து, திருவனந்தபுரம் நோக்கி வரும் தனியார் பேருந்தில் பயணித்து வருகையில், குமரி சோதனை சாவடியில் சிக்கியுள்ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

பிடிபட்ட இங்கிலாந்து கரன்ஸிக்கு ( பவுண்டு) நிகரான இந்திய மதிப்பு ரூபாய் 82.35 லட்சம் எனத்தெரியவந்தது. இதைக்கடத்தியவரான கானா நாட்டைச் சேர்ந்த ராப் எடிசன் (வயது 41) என்பவரை பாறசாலை போலீஸார் கைது செய்தனர். மேலும் எடிசனிடம் 'இந்த கரன்ஸிகளை யார் கொடுத்தார், இந்தப் பணத்தை யாரிடம் மாற்ற திருவனந்தப்புரம் வந்தார். இதற்குப்பின் இருக்கும் கடத்தல் கும்பல் தலைவர் யார்?' என்பது குறித்த விசாரணையை பாறசாலை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon