மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

அதிபர் தேர்தல்: ஒரே ஆண்டில் மகத்தான சாதனை!

அதிபர் தேர்தல்: ஒரே ஆண்டில் மகத்தான சாதனை!

பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் இளம் அதிபராக போட்டியிட்ட இம்மானுவேல் மக்ரோனின் கட்சியான ரிப்பளிக் ஆன் தீ மூவ் கட்சி 351 வாக்குகள் பெற்று பெரும்பான்மை வெற்றி பெற்றது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் முதலில் அதிபர் தேர்தலும், அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுவது வழக்கம். இரண்டு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின்போது, முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெறவில்லையென்றால், முதன்மை இடங்களைப் பிடித்த வேட்பாளர்களிடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, அங்குத் தேர்தல் நடைபெற்றது. பிரான்ஸின் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், ‛என் மார்சே' அணியின் இமானுவேல் மக்ரோன் மற்றும் ‛தேசிய முன்னணிக் கட்சி'யின் மெரைன் லி பென் ஆகிய இருவரிடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் மக்ரோன் 23.9% ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். லி பென் 21.4% ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். இந்த வாக்குப்பதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதல் 2 இடம் பெற்ற வேட்பாளர்களில் அதிபரை நிர்ணயிப்பதற்கான 2-ம் சுற்று வாக்குப்பதிவு கடந்த மே 7ஆம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் 65.3 சதவீத ஓட்டுகள் பெற்று அதிபர் தேர்தலில் மக்ரோன் வெற்றி பெற்றார். மெரைன் லி பென்னுக்கு 34.7 சதவீத ஓட்டுகளே கிடைத்தது. வெற்றி பெற்றதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் எனும் பெயர் மக்ரோனுக்கு கிடைத்துள்ளது.

577 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ரிப்பளிக் ஆன் தீ மூவ் கட்சி சார்பில் 39 வயதான இம்மானுவேல் மக்ரோன் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டார். ரிப்பளிக் ஆன் தீ மூவ் கட்சி முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று ஜூன்18ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. மொத்தம் 577 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு சரிபாதிக்கும் மேலாகப் பெரும்பான்மை இடங்களாக 351 இடங்களைப்பெற்று ரிப்பளிக் ஆன் தீ மூவ் கட்சி வெற்றியடைந்துள்ளது. அதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் இளம் அதிபராக இம்மானுவேல் மக்ரோன் பொறுப்பேற்கவுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் அரசியல் வரலாற்றில் தீவிர அரசியல்வாதியாக இல்லாமலும், புதுக்கட்சி துவங்கிய ஒரே ஆண்டில் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள பிரான்ஸ் நாட்டின் இளம் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon