மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

லட்சியம் இல்லாத வாழ்க்கை: நிக்கி கல்ராணி

லட்சியம் இல்லாத வாழ்க்கை: நிக்கி கல்ராணி

`டார்லிங்', `யாகாவாராயினும் நா காக்க', `கோ 2', `வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', உள்ளிட்ட படங்களில் நடித்த நிக்கி கல்ராணி அடுத்து ஆதி ஜோடியாக மரகத நாணயம் படத்தில் நடித்திருக்கிறார். இது பற்றி அவர், `திரையுலகுக்கு வந்து மூன்றரை வருடங்கள் ஆகியிருக்கிறது. இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ், மலையாள படங்களில் அதிகம் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கில் சரவன் இயக்கியுள்ள மரகதநாணயம் திரைப்படம் வெற்றிகரமாகத் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த நடிகையும் ஏற்காத கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன். சினிமாவில் எனக்கு நிறைய தோழிகளோ, நண்பர்களோ கிடையாது. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நான் பெங்களூர் சென்று எனது அப்பா, அம்மாவுடன் தங்கிவிடுவேன்.

வீட்டில் 2 செல்ல நாய்கள் வளர்க்கிறேன். படப்பிடிப்புக்கு வரும்போது அவைகளை ரொம்பவே மிஸ் செய்கிறேன். ஊருக்குச் சென்றால் அதனுடன் நேரம் செலவிடுவேன். பார்ட்டிக்கு செல்வீர்களா? என்கிறார்கள். பார்ட்டிக்கு செல்லும் பழக்கமும் இல்லை, குடிக்கும் பழக்கமும் இல்லை. லட்சியம் என்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. வாழ்க்கையில் எது வருகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். என்ன நடக்க வேண்டும் என்ற பெரிய திட்டங்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதை நான் நம்புகிறேன்’ என்று பத்திரிகை சந்திப்பில் நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon