மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

ராகுலுக்கு மோடி வாழ்த்து!

ராகுலுக்கு மோடி வாழ்த்து!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தனது தாய்வழிப்பாட்டியை சந்திப்பதற்காக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தற்போது இத்தாலிக்குச் சென்றுள்ளார். அங்கு தன் உறவினர்களுடன் அவர் பிறந்தநாளை கொண்டாடுவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ய, காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ராகுல் காந்தி, நீண்ட நாள் நல்ல உடல்நலத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon