மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

சென்னை வக்கீலுக்கு வெட்டு

சென்னை வக்கீலுக்கு வெட்டு

சென்னையில் இன்று ( ஜுன் -19) காலையில் பரபரப்பான மக்கள்கூடும் இடத்தில் வக்கீல் ஒருவரை, மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும்அதிர்ச்சியை உள்ளாக்கியிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கேசவன். இவர் இன்று காலை பணி நிமித்தமாக கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகில் சுமார் 8.30 மணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு, தப்பியது.

வாரத்தின் முதல் பணி நாளான, திங்கட் கிழமையன்று, மக்கள் அதிகம் கூடும் ரயில்வே நிலையம் அருகில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது, சென்னைவாசிகளை அச்சமடையச் செய்திருக்கிறது. மேலும் சென்னை கடற்கரை ஐஜி அலுவலகம் அருகே, இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்திருப்பது தமிழக போலீஸார் மேல், மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.

தாக்கப்பட்ட கேசவனை அக்கம்பக்கத்தைச் சேர்ந்த மக்கள், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர். சம்பவம் அறிந்த வந்த அப்பகுதி போலீஸார், தாக்குதலுக்கான பின்னணி குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் வெகுவிரைவில் பிடிபடுவர் என நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்கள் போலீஸார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon