மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

குறும்பட கலைஞர்களுக்கு `லிப்ரா’ தரும் வாய்ப்பு!

குறும்பட கலைஞர்களுக்கு `லிப்ரா’ தரும் வாய்ப்பு!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரொடக்சன்ஸ். `நளனும் நந்தினியும்’, `சுட்ட கதை’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது குறும்பட இயக்குநர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் அவர்களுக்கு வெள்ளித்திரை வாசலைத் திறந்துவிடும் ஒரு முயற்சியாகவும் குறும்பட போட்டி ஒன்றை மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குநர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜூலை-15ஆம் தேதிதான் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புவதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவில் இருக்கக் கூடாது என்பதும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போட்டியின் முக்கிய விதிகள்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த குறும்படங்களை பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள். அந்த பத்து படங்களும் விழா நடைபெற இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்தமாக திரையிடப்பட்டு அதில் அனைத்துப் பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அன்று மாலையே பரிசளிப்பு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது. முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தொடர்புக்கு

No.14, 1st Cross Street,

Lambert Nagar, AlwarThirunagar,

Chennai – 87.

Mail : [email protected]

Mob: 97899 16561

Off: 044 – 4208 9658

facebook : https://www.facebook.com/LIBRAShortFilmAwards/

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon