மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் : மத்திய அரசு!

2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் : மத்திய அரசு!

அதிக விளைச்சல் காரணமாக வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் பொருட்டு வெங்காயத்தை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த காரிஃப் பருவத்தில் மத்திய பிரதேசத்தில் வெங்காய விளைச்சல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது, வெங்காயத்தின் மொத்த கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.6க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் பொருட்டு மத்திய பிரதேசத்திடம் இருந்து 2 லட்சம் டன் வெங்காயத்தை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சந்தைத் தலையீடு திட்டத்தின் (எம்.ஐ.எஸ்.) கீழ் மத்தியப் பிரதேசத்திடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதியளித்துள்ளதாக வேளாண் அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு டன் வெங்காயம், ரூ.5,867க்கு வாங்கப்படும். அதிக விளைச்சல் மற்றும் குறைவான தேவை காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் காய்கறி வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஆண்டுக்கு 26 லட்சம் முதல் 28 லட்சம் டன் வரை வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon