மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

சர்வதேச யோகா விழாவில் கவர்னர்!

சர்வதேச யோகா விழாவில் கவர்னர்!

ஈஷா யோகா மையத்தில் வருகிற ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்து கொள்கிறார்.

கோவை ஈஷா யோகா மையம் சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆண்டுதோறும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி, 3-வது ஆண்டு உலக யோகா தின நிகழ்ச்சி நாளை மறுநாள் ஜூன் 21ஆம் தேதி புதன் கிழமை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தலைமை தாங்குகிறார்.

விழாவில், யோகா நிகழ்ச்சியைத் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தொடங்கி வைத்து, தமிழகத்தில் இருக்கும் 5 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு யோகா கற்று கொடுக்கும் பணியையும் தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டாக்டர். மகேஷ் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சத்குரு யோகா பயிற்சிகளை வழங்குகிறார். கவர்னர் வருவதையொட்டி ஈஷா யோகா மையம் மற்றும் பூண்டி மலை அடிவாரப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon