மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு : தமிழிசை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு  : தமிழிசை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திங்கள்கிழமை(இன்று) திண்டுக்கல் சென்றார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

மத்திய அரசானது விவசாயிகளுக்காக 6 அம்ச திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தியை மட்டும் பெருக்காமல் வருமானத்தை 2 மடங்காக பெருக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.அதேபோல், ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.அதில், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.

அதேபோல், ஆர்.கே.நகரில் பணப்பட்டு வாடா செய்ய முயன்றதாக முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணையை சந்திக்க வேண்டும் என்பது நிரூபணமாகிறது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளார். எதையும் உடனே செய்து விட முடியாது. தீர விசாரணை செய்த பிறகே முடிவு செய்யப்படும்.மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது என்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மணல் குவாரிகளை தமிழக அரசு வரைமுறைபடுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம், புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. எனவே இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon