மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 28 ஜன 2020

தேர்தல் ஆணையம் பரிந்துரை குறித்து தகவல் இல்லை: முதல்வர்!

தேர்தல் ஆணையம் பரிந்துரை குறித்து தகவல் இல்லை: முதல்வர்!

‘தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்ததாக எந்த தகவலும் தனக்கு வரவில்லை’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த தேர்தல் ஆணையம் முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தது. ஆனால், இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வைரக்கண்ணன் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று ஜூன் 18ஆம் தேதி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபின் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆர்.கே.நகரில் நடைபெற்ற பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய சொன்னதாக எந்த தகவலும் இல்லை. தமிழகம் முழுவதும் 1,519 ஏரிகளில் குடி மராமத்து பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவைக்குள் நுழைந்த நாளில்தான் நானும் பேரவைக்குச் சென்றேன்.

என் மீது எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றன. தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை” என்று தெரிவித்தார் .

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon