மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

குடியரசுத் தலைவர் தேர்தல்: டிஜிட்டல் இந்தியா எங்கே?

குடியரசுத் தலைவர் தேர்தல்: டிஜிட்டல் இந்தியா எங்கே?

‘பால் வாங்குவதில் இருந்து பருப்பு வாங்குவதற்குகூட கார்டை பயன்படுத்துங்கள், ரொக்கமில்லா பொருளாதாரத்தை உருவாக்குங்கள்’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கிறார். டீக்கடைகளிலும், டிபன் கடைகளிலும்கூட ‘பேடிஎம்’ பயன்படுத்துங்கள் என்று பிரதமர் படத்தையே போட்டு விளம்பரம் செய்கிறார்கள்.

ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 15,000 ரூபாயை ரொக்கமாகத்தான் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். செக் கொடுத்தால் ஏற்க மறுக்கிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன.

“குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், மனு தாக்கல் செய்கையில் டெபாசிட் தொகை 15,000 ரூபாய் செலுத்த வேண்டும். இதை காசோலையாகவோ, மின்னணு பரிமாற்றம் மூலமாகவோ செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பணமாகத்தான் செலுத்த வேண்டும் அல்லது ரிசர்வ் பேங்க்கில் டெபாசிட் செய்து அதற்கான ரசீதை மனுவுடன் இணைக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் பணத்தை எண்ணுவதற்காகவே ஒரு வங்கி ஊழியரும் அமர்த்தப்பட்டிருக்கிறார்” என்கிறார்கள் மனு தாக்கல் செய்ய சென்று வந்தவர்கள்.

இந்தச் செய்தியை டெல்லியிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. டீக்கடைகள் வரை பாயும் டிஜிட்டல் இந்தியா, குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கே போனது என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon