மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

சிரஞ்சீவியுடன் இணையும் அனுஷ்கா!

சிரஞ்சீவியுடன் இணையும் அனுஷ்கா!

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தில் நடித்ததற்காக அனுஷ்காவின் மார்க்கெட் உயர்ந்ததோடு ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த இரு படங்களுக்காக அனுஷ்கா சில படங்களைத் தவறவிடவும் செய்தார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை கூட்டியது பாகுபலி 2 படத்துக்குப் பிரச்னையாக, இயக்குநர் ராஜமௌலிக்கும் அவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. பாகுபலி 2 படத்துக்காக அவர் தவறவிடப்பட்ட முக்கியமான படம், சிரஞ்சீவி நடிப்பில் உருவான ‘கைதி எண் 150’. இது தமிழில் விஜய் நடிப்பில் உருவான ‘கத்தி’ படத்தின் ரீமேக்காகும். அப்போது அவர் தவறவிட்ட வாய்ப்பை தற்போது பிடித்துள்ளார்.

சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் அழைப்பின்பேரில் சிரஞ்சீவி நடிக்கும் ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. இந்தப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாக்கப்படும் இந்தப்படத்தில் அனுஷ்கா நடிப்பது மூன்று மொழிகளின் மார்க்கெட்டைப் பிடிக்க உதவும் என படக்குழு நம்புகிறது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon