மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: போராளிகளைக் காக்கும் இளைஞர்கள்! -அட்னன் பட்

சிறப்புக் கட்டுரை: போராளிகளைக் காக்கும் இளைஞர்கள்! -அட்னன் பட்

அரசாங்கத்தின் மீதும், பிரிவினைவாதிகள் மீதும் நம்பிக்கையிழந்த எண்ணற்ற காஷ்மீர் இளைஞர்கள் தங்களுக்காகப் போராடும் உள்ளூர் போராளிகளுக்காகப் போராடவும் துணிந்துள்ளனர்.

ஸ்ரீநகர்

எப்பொழுதும் குளுமை நிறைந்த காஷ்மீரில், ஜூலை மதம் ஒரு சூடான மாலைப்பொழுதில், ஸ்ரீநகர் நகரத்தைவிட்டு சற்று ஒதுங்கியிருந்த சல்டகர் பகுதியில் உள்ள என் வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, எங்கள் உறவினர்கள் நிறையப் பேர் எங்களின் வீட்டுக்கு வந்தார்கள். நாங்கள், அனைவரும் ஒரு சினார் மரத்தின் கீழே வெளியே விளையாடிக்கொண்டிருந்தோம். அந்த நாள்கள் மறக்க முடியாத தனித்தன்மையானது. அந்த நாள்களில் திடீர் திடீரென வெடிக்கும் துப்பாக்கிச்சூட்டின் ஒலி எங்கள் மனதை மாற்றியது. ஒருநாள் திடீரென துப்பாக்கிச் சத்தம் அதிகமாகக் கேட்ட சில விநாடிகளில், என் மாமா வெளியே வந்து எங்களைக் குழந்தைகள் வண்டியில் உள்ளே அழைத்துச் சென்றார். எல்லோரும் சமையலறையில் ஒன்று கூடினர். என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோரும் மிகவும் பயத்தில் இருந்தார்கள்.

அதன் பின்னர், இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றன. சில சமயங்களில் ஜன்னல் வழியாக என்ன நடக்கிறது என்று மெள்ள முணுமுணுத்தபடி பார்த்தபோது அவையும் நீண்ட காலமாக செல்லவில்லை. 1990ஆம் ஆண்டில் காஷ்மீரில் அடிக்கடி நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவம் அருகிலுள்ள வீட்டிலும் நடைபெற்றது. அரசு படையினரால் ஆளுவே (உருளைக்கிழங்கு) என்று முத்திரை குத்தப்பட்ட உள்ளூர் போராளி ஒருவர் அருகிலுள்ள வீட்டில் இருந்தபோது, அவரது உண்மையான பெயர் என்ன என்றுகூட எனக்குத் தெரியாது. அதேபோல், அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் வசித்ததாக எனது முன்னோர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஒருநாள் அரசு படையினர் அருகிலுள்ள அந்த வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாகச் சுட்டனர். துப்பாக்கிச்சூடு ஆரம்பித்ததும், கூடுதல் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். அதில், அந்த வீட்டில் இருந்த அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அந்தப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பிடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சினர். அதையடுத்து, இருள்சூழ்ந்த மாலைப்பொழுதில் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தது எனது தாத்தாவும், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையும் மட்டுமே. இது நடந்தது 1995இல். அப்போது, ஆயுதப்படை போராளிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஒவ்வொரு மூலையிலும் இருந்தனர். அவர்களுக்கு ஒரு பிரபலமான அனுதாபம் இருந்தது. ஆனால், அரசு தரப்பிலிருந்து பழி வாங்கப்படுவோம் என்று ஓர் ஆழமான வேரூன்றிய பயமும் இருந்தது.

இப்போதிருந்து, 22 ஆண்டுகள் வேகமாக முன்னோக்கி சென்றால், ஆயுதங்களுடன் கூடிய போராளிகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இப்போது, ஒருசில உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே (சுமார் 200 பேர் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்) பெரும்பாலும் கிராமங்களிலும், காடுகளிலும் இருந்து செயல்படுகின்றபோதும் அவர்களிடையே பயம் தோன்றுகிறது. ஆனால், பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே இருந்த பயம் முற்றிலும் மறைந்துவிட்டது.

போராளிகளைக் காப்பாற்றுவது

துப்பாக்கிச் சண்டைகளிலிருந்து விரட்டப்படுவதற்குப் பதிலாக, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்கள் மற்றும் கற்களை எடுத்துச்செல்கின்றனர். இதுபோன்ற சம்பவம் முதன்முதலில் கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போதிருந்தே, இதுமாதிரி டஜன் கணக்கான சம்பவங்களும் நடைபெற்றன. போராளிகள் தப்பிப்பதற்கு உதவும்வகையில், போதுமான திசை திருப்பலை உருவாக்குவதற்காகச் சுற்றிவளைத்த உள்ளூர் மக்கள், இதுபோல் பலமுறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தச் சம்பவங்களின்போது பொதுமக்களில் சிலர் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது. நடப்பாண்டில் மட்டும் காஷ்மீரில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசாங்கப் படைகளுடன் மோதல்களில் இதுவரை ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவத் தலைமை அதிகாரியான பிபின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையில், போராளிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் பொதுமக்கள், ‘போராளிகளின் தரைத் தொழிலாளர்கள்’ என்று கருதப்படுவார்கள் என்றும், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவம் எச்சரித்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பண்டிபொரா மற்றும் ஹன்டுரா ஆகிய இரு பிரதேசங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் போராளிப் படையினரைத் தப்பிச் செல்வதற்கு உதவும் வகையில் அரசாங்கப் படைகளுடன் பொதுமக்கள் மோதிக்கொண்டதில், ஒரு ஆண் காயமடைந்தார். ஒரே சமயத்தில் எதிர்ப்பாளர்களையும் போராளிகளையும் சமாளிக்க வேண்டியதன் காரணமாக ராணுவத்துக்கு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது என்று ராவத் கூறினார்.

ஆனால், ராணுவத் தலைவரின் எச்சரிக்கை எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. கடந்த மார்ச் 9ஆம் தேதி, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பட்கம்பொரா கிராமத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றபோது அதில், பொதுமக்களுக்கும் அரசாங்கப் படைகளுக்குமிடையே பெரிய மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு வளையத்தை முறியடிக்கும் முயற்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் அந்தச் சந்திப்பு தளம் நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தினரைத் தடுத்து நிறுத்தும்வகையில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 15 வயதான ஆமிர் நாஜிர், மற்றும் தஹப் கிராமத்தில் 22 வயது ஜலாலுதின் ஆகிய இரண்டு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் ஏழு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் உட்பட பெரும்பாலோர் இளைஞர்கள் ஆவார்கள்.

ஆதரவைப் புரிந்துகொள்ளுதல்

மார்ச் 28ஆம் தேதி காலை, புத்காம் மாவட்டத்திலுள்ள சதுர பிரதேசத்தின் டர்பு பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, என்கவுன்ட்டர் நடக்கும் பகுதிகளில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் ஷாஹீத், 17 வயதுக்குட்பட்டவராக இருந்தார். அவர் எழுந்து பிரதான சாலையில் நேராகச் சென்றார். துப்பாக்கிச்சூடு சத்தமாகவும் தீவிரமாகவும் இருந்தது. அங்கு ஏற்கெனவே நிறையப் பேர் சாலையில் இருந்தார்கள். அங்கு என் நண்பர்களை நான் பார்த்தேன். என்கவுன்ட்டர் எங்கு நடக்கிறது என்று தெரியாமல், நான் அவர்களுடன் சேர்ந்து நடந்து சென்று மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டேன். ஒவ்வொரு கிராமமாகக் கடந்து பாதுகாப்புப் பகுதியை அடைந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்தனர்.

காஷ்மீரிலிருந்து ஓர் உள்ளூர் போராளி ஒரு வீட்டுக்குள் சுற்றி வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில், மூன்று பொதுமக்கள் பாதுகாப்புப் படைகளால் துப்பாக்கிச்சூட்டில் இறந்தனர். அந்தச் சம்பவத்தில் மேலும் 12-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் குண்டடிப்பட்டு படுகாயமடைந்தார்கள். சம்பவம் நடந்த இடத்துக்கு முன்னால்தான் நாங்கள் இருந்தோம். ஆனால், எங்கள் இரு பக்கங்களிலும் போலீஸ் மற்றும் ராணுவம் இருந்தன. நாங்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது எங்கள் தோழர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்று ஷாஹித் கூறினார்.

ஷாஹித் கல்லூரியில் சேர்ந்தபோது, அவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாகக் கூறுகிறார். அவரின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளுவதாகப் பயந்தாரா என்று நான் அவரிடம் கேட்டபோது, ‘ஆபத்து உள்ளது. ஆனால், நான் பயப்படவில்லை’ என்றும் ‘நாங்கள் எதிர்க்காவிட்டாலும்கூட, அவர்கள் எப்படியும் எங்களைக் கொல்வார்கள். இந்நிலையில், மற்றொரு என்கவுன்ட்டர் நடந்தால், அங்கேயும் போவேன்’ என்று அவர் பதிலளித்தார்.

ஷாஹித்தைவிட ஒரு வயது அதிகமான அவரது மற்றொரு நண்பர் மஜீத், என்கவுன்ட்டர் நடந்த நாளில் ஷாஹித்துடன் இருந்தார். ‘நாங்கள் விரும்பும் வழியில் வாழ அனுமதிக்கப்படாவிட்டால், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும். அதனால் எங்களுக்குப் பயமில்லை’ என்று அவர் கூறினார். அதைத்தொடர்ந்து, மார்ச் 9ஆம் தேதி புல்வாமாவில் உள்ள பாட்காம்போராவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞன் கூறுகையில், ‘காஷ்மீர் விவகாரத்தில், காஷ்மீர் மக்களின் நிலைப்பாடு எடுக்கும் நேரம் வந்து விட்டது. ஆனால், அதற்காக அதிகம் செலவழிக்க வேண்டியதிருக்கலாம்’ என்று கூறினார்.

காஷ்மீர் இளைஞர்களிடையே இந்த அணுகுமுறையின் தோற்றமும், தற்போதைய வாலிபர்களின் கருத்தும் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொதுமக்கள் கிளர்ச்சியை மீண்டும் கொண்டுவரலாம். ஆனால், இது முடிவில்லாதது. தற்போது, முதன்முறையாக, நிராயுதபாணியான பொதுமக்கள் மற்றும் பெரும்பாலும் இளம் சிறுவர்கள், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கு அரசு தனது பெரும் சக்தியுடன் பதில் தெரிவித்தபோது, 100-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். அதையடுத்து காஷ்மீரில் மேலும் இரண்டு பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, அரசு தனது படைகளைக்கொண்டே பதில் தெரிவித்தது. கடந்த 2016ஆம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் பாதுகாப்புப் படையினரால், போராளிகளின் தளபதியாக இருந்த புர்கான் வாணி கொல்லப்பட்டார். அதன்பின்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 80-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதோடு, நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

அதிகப்படியான படைகளைக் கொண்டு எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அரசு பயன்படுத்தும் சக்தியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இன்றைக்குப் பல இளைஞர்கள் விரும்புவதாக காஷ்மீரின் மனித உரிமைகள் பாதுகாவலரான குர்ராம் பர்வேஸ், நம்புகிறார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘1990ஆம் ஆண்டுகளில் நிலைமை மிக மோசமாக இருந்தது, ஆனால் பொதுமக்கள் மீது மோதல்கள் பொதுவாக இல்லை. கைப்பைகள் அளவுகளிலேயே சோதனைகள் இருந்தவந்த நிலையில், துப்பாக்கிகள் மூலம் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, அதிக படைபலத்தை கொண்டு பயமுறுத்தும் தந்திரம் அதிகப்படியானதாக உள்ளது’ என்றார்.

அடையாளம் காணும் போராளிகளின் சடலங்களை இறுதிச் சடங்குகளுக்காகக் கொண்டு செல்லும் இந்தக் கலாசாரம் கடந்த 1990-களில் ஹுரியத்தால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. [சையத் அலி ஷா] கீலனி சஹிப் ஒவ்வொரு சவ அடக்கத்திலும் இருக்க வேண்டும். இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட சிலர் மட்டுமே இருக்க வேண்டும். இன்று, அது இளைஞர்களால் செய்யப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு என்கவுன்ட்டர்களையும், ஒவ்வொரு சடங்குகளையும் ஒரே மேடையில் காண்கிறார்கள். காஷ்மீரைக் காலம் காலமாக ஆட்கொண்டிருக்கும் அரசியல் முட்டுக்கட்டை, காஷ்மீர் மக்களின் கோபத்துக்குக் காரணமாக உள்ளது.

இந்தக் கோபம் சமீபத்திய மாணவர் எதிர்ப்புகளில் காட்டப்பட்டுள்ளது. பள்ளிச் சீருடையில் இளம் சிறுவர்களும், சிறுவர்களும் பாதுகாப்புப் படையினருடன் மோதினர். இளைஞர்களிடையேயும் தங்கள் உயிர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான மற்ற ஆதாரங்கள் உள்ளன. சமூக மீடியாவில் பரவலாக பகிரப்பட்ட வீடியோவில், ஓர் இளைஞன் ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஒரு சி.ஆர்.பி.எஃப். மனிதருடன் வாதிடுகிறார். அந்த இளைஞன், ‘தன்னுடைய வேலையை மட்டும் செய்ய வேண்டும். அடுத்தவருக்குக் கட்டளையிடக் கூடாது’ என்று சொல்கிறார். மற்றொரு வீடியோவில், ஒரு டிரக் டிரைவருடன் அவர் வாகனத்தைத் தாக்கியதாகக் கூறி ஒரு ராணுவ டிரைவர் வாதிடுகிறார். அப்போது, ஒரு பெருங்கூட்டம் கூடி அந்த டிரக் டிரைவருக்கு ஆதரவாகவும், மற்றும் ராணுவ வீரர் சேதத்துக்கான மதிப்பைக் கொடுக்க வேண்டும் என்று கூறுவதை அதில் காணமுடிகிறது.

பிரிவினைவாதிகள்

காஷ்மீர் இளைஞர்கள் சிறிது காலம் அரசியலை வைத்து ஏமாற்றப்பட்டனர். அதேநேரத்தில், ஹுரியத் மற்றும் பிற பிரிவினைவாதிகளுடன் ஒரு பெரிய அதிருப்தி ஏற்பட்டது. போராளிகளின் தளபதி புர்ஹான் வாணி இறந்ததையடுத்து இளைஞர்களிடையே மாற்றம் ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த உணர்வு வளர்ந்துள்ளது. தெற்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கல்காம் மாவட்டத்தில் சில இளம் போராளிகளைத் தூக்கி எறிந்த ரெட்வானி என்ற எதிரியான கிராமத்தில் இருந்த இர்ஷாத், பல என்கவுன்ட்டர் சம்பவங்களில் இருந்தவர். அவர் போராளிகளைச் சேர்க்க முடியாவிட்டால், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் குறைந்தபட்சம் அவர்களுக்கு உதவுவார் என்று கூறுகிறார். அவரது நண்பர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமுற்றார். இதில் ஃபிர்சல் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் இருந்தனர். அதில் நான்கு போராளிகள், மூன்று வீரர்கள் மற்றும் ஒரு சிவிலியன் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட போராளிகளில் ஒருவர் அதே கிராமத்திலிருந்து வந்தவராவார்.

கடந்த டிசம்பர் மதம், அர்வினி கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மஜீட் சர்கார் மற்றும் ராகல் அமீன் தார் ஆகிய இருவரும் 48 மணிநேர என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக அவர் கூறுகிறார், ‘மற்றவர்கள்கூட உள்ளே சிக்கி இருந்தனர். ஆனால் அவர்கள் தப்பித்துக்கொள்ள முடிந்தது. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு எதிராக மஜீத் தைரியமாகப் போராடினார். எங்களது தலைவர்கள் ஒரே தீர்வைக் காட்டினால், நாங்கள் ஆஷாதியாவை அடைந்திருப்போம். ஹுரியத் மற்றும் பிற பிரிவினைவாதிகள் 2010-இல் மற்றும் கடந்த ஆண்டு தங்கள் நிலைப்பாட்டை எடுப்பதில் தோல்வி அடைந்தனர்’ என்று காஷ்மீரில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு அவர் அடையாளம் காட்டினார்.

அரசாங்கத்தின் மீதும், பிரிவினைவாதிகள் மீதும் நம்பிக்கையிழந்த எண்ணற்ற காஷ்மீர் இளைஞர்களுக்காகப் போராடும் உள்ளூர் போராளிகளில் பலரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டனர். என்கவுன்ட்டர் சம்பவங்களில் அவர்கள் மரணத்திலிருந்து தப்புவதற்கு உதவ முயலுங்கள். அதுவே அவர்களுக்குச் செய்ய வேண்டிய சரியான காரியமாகும். கடந்த ஆண்டு முதல் போர்க்குணமிக்க மக்கள் ஆதரவு மிகுந்த அளவில் அதிகரித்துள்ளதை பல போலீஸ் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் குறிப்பாக, தெற்கு காஷ்மீரில் பல விஷயங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நான் கூறுவேன். சில இளைஞர்கள் போர்க்குணமிக்க அணிகளில் இணைந்துள்ளனர். இத்தகைய இளைஞர்கள் நடவடிக்கை குறித்து, சமூக ஊடகங்களில் அதிக பகிர்வு செய்யப்படுகிறது என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தி வயர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆனாலும், பல இளம் போராளிகள் தொடர்ந்து போலீஸாரால் பதிவு செய்யப்படுவது அல்லது தொடர்ந்து துன்புறுத்தப்படுவது என்பது தொடர்கதையாகவே உள்ளன.

எந்தக் காரணத்துக்காக இருந்தாலும், இளம் போராளிகளின் இறுதி தியாகத்தை முடிவு செய்ய காஷ்மீர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படிக்கும், 14 வயதான சமீர் என்ற மாணவரைச் சந்தித்தேன். சமீரின் புதிய ஸ்மார்ட்போன் போராளிகளின் வீடியோ மற்றும் படங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அவர் சமீபத்தில் நடந்த சில என்கவுன்ட்டர்களின் வீடியோக்களைக் கொண்டிருக்கிறார். ‘பள்ளியில் உள்ள நண்பர்களிடமிருந்து நான் இதைப் பெறுகிறேன். எனது தொலைபேசியில் நான் வைத்திருக்கும் காரணத்தால் இந்தத் துணிச்சலான மனிதர்களை நாம் அறிந்திருக்க மட்டுமன்றி நினைவிலும் வைத்திருக்க வேண்டும்’ என்று சமீர் கூறினார். ‘தெற்கு காஷ்மீரில் செயல்படும் பெரும்பாலான போராளிகளின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது, அவர்களுக்கு உதவும் பெரும் மரியாதை’ என்றும் தெரிவித்தார்.

நன்றி: தி வயர்

கட்டுரையாளர்: அட்னன் பட். காஷ்மீர் மற்றும் டெல்லிக்கிடையே பயணம் செய்யும் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளர் ஆவார்.

மொழியாக்கம்: இ.சி.பிர்லா

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon