மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

தினம் ஒரு சிந்தனை: இசை!

தினம் ஒரு சிந்தனை: இசை!

இசையில் உள்ள நல்ல விஷயம், இசை உங்களைத் தாக்கினால் உங்களுக்கு வலிக்காது.

- பாப் மார்லி (6 பிப்ரவரி 1945 - 11 மே 1981). ஜமைக்கா ரெக்கே என்னும் இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்தவர். இசையின் மீது பிறந்த காதலால் நண்பர்களுடன் இணைந்து ‘வெய்லர்ஸ்’ என்னும் இசைக் குழுவை உருவாக்கினார். 1963இல் வெளியான ‘சிம்மர்ஸ் டவுன்’ பாடல் அமெரிக்காவிலும் பிரபலமானது. ‘சோல் ரெபல்ஸ்’, ‘கேட்ச் எ ஃபயர்’, ‘எக்ஸோடஸ்’, ‘சர்வைவல்’ என்று புகழ்பெற்ற ஆல்பங்களை வெளியிட்டார். இது உலகமெங்கும் உள்ள ரசிகர்களை அவருக்குப் பெற்று தந்தது. கடந்த 2001ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருது வழங்கப்பட்டது. மக்களை மிகவும் நேசித்தார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon