மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

ஸ்ரீதேவிக்குப் பிறகு நான்தான்: கங்கனா ரனாவத்

ஸ்ரீதேவிக்குப் பிறகு நான்தான்: கங்கனா ரனாவத்

பாலிவுட் திரைப்படங்களில் சிறப்பாக நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக்கொண்டுள்ள கங்கனா ரனாவத், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘ஸ்ரீதேவிக்குப் பிறகு காமெடி கதாபாத்திரத்தில் நான்தான் சிறப்பாக நடித்து வருகிறேன்’ என்று தெரிவித்தார்.

சிம்ரன், மணிகர்ணிகா போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் கங்கனா, சமீபத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியாகிய ‘ரங்கூன்’ பாலிவுட் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ‘தாம் தூம்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான கங்கனா, தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஒருவராகவே உள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ரீதேவிக்குப் பின்னர் பாலிவுட் திரையுலகில் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க நான் மட்டும்தான் முயற்சி செய்து வருகிறேன். பெரும்பாலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிகைகள் நடிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon