மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

ஜியோவின் பிரைம் திட்டம்: 90 சதவிகிதப் பயனாளர்கள் மாற்றம்!

ஜியோவின் பிரைம் திட்டம்: 90 சதவிகிதப் பயனாளர்கள் மாற்றம்!

ஜியோ பயனாளர்களில் 90 சதவிகிதப் பேர் ஜியோ பிரைம் திட்டத்துக்கு மாறியுள்ளதாக அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 1000 ஜியோ பயனாளர்களிடம் இதுதொடர்பான ஆய்வை ஜூன் மாதத்தின் மத்தியில் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் வங்கி நடத்தியது.

அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது, ‘சலுகை காலம் முடிந்த பின்பும் ஜியோ சேவையைத் தொடர தயாராக இருப்பதாக 76 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 80 சதவிகிதம் பேரிடம் ஒரே ஒரு ஜியோ சிம்கார்டு மட்டுமே உள்ளது. 90 சதவிகிதம் பேர் ஜியோவின் பிரைம் திட்டத்தில் உறுப்பினராகியுள்ளனர். மேலும், 84 சதவிகிதம் பேர் ஜியோவின் மாதாந்திர டாப் அப் திட்டத்துக்குக் கட்டணம் செலுத்தியுள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாதந்திர திட்டத்தைப் பொறுத்தவரை ரூ.303 மற்றும் ரூ.309 திட்டத்தையே பலரும் தேர்ந்தெடுத்துள்ளனர். அதேவேளையில், ஐந்து சதவிகிதம் பேர் மட்டுமே ரிலையன்ஸின் எல்.ஒய்.எஃப். போன்கள் மூலம் ஜியோ சேவையை பெறுகின்றனர். ஜியோ பயனாளர்களில் 40 சதவிகிதம் பேர் சாம்சங் மற்றும் 7 சதவிகிதம் பேர் ஐபோன் பயன்படுத்துகின்றனர். 41 சதவிகிதம் ஜியோ பயனாளர்கள், மற்ற நெர்வொர்க்கைப் பயன்படுத்துபவர்களுக்குக் கால் செய்வது என்பது கடினமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஜியோவுக்கு ஏற்றப் போட்டியாளராக ஏர்டெல் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

டிராய் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி ஏப்ரல் முடிவில் சுமார் 112 மில்லியன் பயனாளர்கள் ஜியோ சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon