மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

ஜி.எஸ்.டி. அமல்: அருண் ஜெட்லி

ஜி.எஸ்.டி. அமல்: அருண் ஜெட்லி

17ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜூன் 18ஆம் தேதி டெல்லியில் இருக்கும் விக்யான் பவனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் லாட்டரி ஆகியவற்றுக்கான வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அவற்றுக்கான வரிவிதிப்பும் முடிவு செய்யப்பட்டது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் முடிந்தபின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரசால் நடத்தப்படும் லாட்டரிகளுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற லாட்டரிகளுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்படும். 2,500 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஓட்டல் அறைகளுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்படும். 7,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஓட்டல் அறைகளுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்படும்.

ஆடம்பர நட்சத்திர ஓட்டல்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்படும். அதற்கு குறைவான தரத்தில் இருக்கும் ஓட்டல்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்படும்.

ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படும். ஜூலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டி-க்கான தொடக்க விழா நடைபெறும். காலம்கடத்தி ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் நேரம் இல்லை.

6.5 மில்லியன் தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே ஜி.எஸ்.டி-யில் இணைந்துவிட்டன. அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஜூன் 30ஆம் தேதி மாலை நடைபெறும்” என அவர் கூறினார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon