மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

இந்தியச் சந்தை மதிப்பை அதிகரிக்க அல்காடெல் திட்டம்!

ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனமான அல்காடெல் 10 மில்லியன் டாலர்கள் வருவாயை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் டேப்லட் தயாரிப்புத்துறைக்குக் கூடுதலாக முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் இந்த வருட இறுதிக்குள் தனது சந்தை மதிப்பை 10 சதவிகிதமாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் பிரவீன் வேலச்சா கூறும்போது, “இந்தியச் சந்தையில் அண்மையில் 3 டேப்லட்களை அறிமுகம் செய்தோம். இதில் 'A3 10' மாடல் அண்மையில் வெளியிடப்பட்டதாகும். இந்த மாடல் சாம்சங், மைக்ரோமேக்ஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக வெளியிடப்பட்டதாகும். தற்போதுதான் புதிதாக டேப்லட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். இதற்கு முன்னர் வெளிநாடுகளில் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 2017ஆம் ஆண்டில் நிறுவனத்தின் இந்தியச் சந்தை மதிப்பை அதிகரிக்க முழு கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

புதிதாக வெளியிடப்பட்ட அல்காடெல் 'A3 10' மாடல் டேப்லட்டின் விலை ரூ.9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: 10 இன்ச் டிஸ்பிளே, 2ஜி.பி ரேம், 16 ஜி.பி உள் சேமிப்புத் திறன், 128 ஜி.பி வரை அதிகரிக்கும் தன்மை, 5 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 2 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 4,600 எம்.ஹெச் பேட்டரி போன்ற வசதிகள் உள்ளன. ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதல், கணினி விற்பனை சர்வதேசச் சந்தையில் 8.5 சதவிகிதம் குறைத்துள்ளது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon