மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

முறுக்கிய ராஜஸ்தான் விவசாயிகள்: கிளம்புது மக்கள் போராட்டம்!

முறுக்கிய ராஜஸ்தான் விவசாயிகள்: கிளம்புது மக்கள் போராட்டம்!

இந்தியா முழுக்க சரியான மழையின்மையால் பழுதுபட்டுக்கிடக்கிறது விவசாயம். இதனால் விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்கள் விளைநிலங்களில் போட்ட பணத்தை இழந்து, கடுமையான நஷ்டம் அடைந்துள்ளனர். இதுதவிர, வங்கிகளில் வாங்கிய கடனைக் கட்டமுடியாமல், வங்கி அலுவலர்களின் கடுமையான வசை சொற்களுக்கு ஆளாகி, பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

இதுபோன்று தமிழகம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் கடுமையாக நடந்தது. சமீபத்தில்கூட மத்தியப்பிரதேச விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடுவதற்கு, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு விவசாயிகள் உயிரிழந்தனர் என்பது விவசாயிகள் படும்பாட்டுக்கு ஓர் உதாரணம்.

அந்தளவுக்கு விவசாயிகளின் போராட்டம் சமீப காலங்களில் வரலாற்றில் நிறைய திருப்புமுனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்தப் போராட்டக்களத்தில் ராஜஸ்தானும் புதிதாக களமிறங்கியிருக்கிறது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநில விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்த அறிவிப்பில், நாளை (ஜூன் 20) முதல் விவசாயிகளின் போராட்டம் நிகழும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய கைலாஷ் கண்டோலியா எனும் பாரத கிஷான் சங்க தலைவர் கூறுகையில், “ராஜஸ்தான் முதல்வர் வசுந்திரா ராஜேவின் அரசு, விவசாயிகளை அலட்சியப்படுத்துகிறது. எங்கள் பிரச்னைகளை ஒரு தடவைகூட கேட்டதில்லை. எனவே, ராஜஸ்தான் அரசைக் கண்டித்து, நாளை (ஜூன் 20) முதல் காய்கறி சந்தைகளை மூடி, சாலைகளில் அமர்ந்து காலவரையற்ற போராட்டத்தை மக்களுடன் சேர்த்து முன்னெடுக்கப் போகிறோம்” என்றார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது