மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

கார் தொழிலதிபர் ராஜுவின் கனவு

 கார் தொழிலதிபர் ராஜுவின் கனவு

ராஜு படிப்பில் கெட்டிக்காரன். படிப்பை விட அவன் இயந்திரங்களைப் பிரித்து ஆராய்வதில் பெரிய ஆர்வம் கொண்டவன். குறிப்பாக கார்கள் மீது அவனுக்கு அளவு கடந்த மோகம். ராஜு எட்டு வயதைக் கடக்கும் முன்னே உலகத்தில் உள்ள அத்தனை கார்களின் பெயரையும் ஒவ்வொரு காரின் தனித்தன்மையையும் அக்குவேர் ஆணிவேராக பிரித்துக் கூறுவான். ராஜுவிற்கு உலகத்திலே மிகச் சிறந்த கார் ஒன்றை, இதுவரை இல்லாத வசதிகளோடும் புதுமைகளோடும் உருவாக்க வேண்டும் என்பது அவனுடைய சமீபத்திய கனவு. கார்களை வடிவமைக்க வேண்டும். பெரிய கார் நிறுவனத்துக்கு அதிபதியாக வேண்டும் என்று தன் அன்புக்குரிய தாயிடம் எப்போதும் கூறிக்கொண்டிருக்கிறான்.

ராஜுவின் அப்பா முருகனுக்கு தன் மகனைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. ராஜு குட்டிப் பையனாக இருக்கும் போது ஆசையாக ரிமோட் கார் வேண்டுமென்று கேட்டான். முருகனும் ஆசையாக வாங்கிக் கொடுப்பார். அடுத்த சில மணி நேரங்களில் அந்தக் காரை பிரித்துப் பழுது பார்த்துக்கொண்டிருப்பான் ராஜு. அதைக் கண்டு முருகன் ஆத்திரமடைவார். ராஜு அம்மா செல்லம் என்பதால் அப்பாவின் கோபத்தை பொருட்படுத்தமாட்டான். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தந்தை வாங்கிக் கொடுத்த அந்த கார் புதிய வடிவைப் பெற்றிருக்கும். ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் கார்களில் உள்ள பாகங்களை புதிய காரோடு இணைத்து புதிய காரை உருவாக்கிவிடுவான். அதைக் கண்ட முருகன், “ஏன் இந்த வேண்டாத வேலை” என்று திட்டுவார். ஆனால் அவருக்கு உள்ளூர மகிழ்ச்சிதான். ஆனால் இந்தக் குறும்புத்தனம் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படும் என்ற கவலை அவரை ஆட்டிப் படைக்கும். ராஜு இப்போது ப்ளஸ் டூ முடித்துவிட்டான். அவன் வளர வளர அவன் ஆர்வமும் கற்பனைத் திறனும் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது. அவன் சைக்கிள் இப்போது ஒரு குட்டி மோட்டார் பைக்காகிவிட்டது. பயனற்று கிடந்த தந்தை முருகனின் மோட்டார் சைக்கிள் குட்டி கார் வடிவம் பெற்றுள்ளது.

மகனின் இந்தச் செயல்கள் முருகனுக்குப் பெருமை அளித்தாலும் உள்ளூர கவலைப்பட்டார். எல்லாப் பிள்ளைகளும் டாக்டர், பொறியாளருக்கு படிக்க போராடிக் கொண்டிருக்க தன் மகன் மட்டும் இப்படி இயந்திரங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறானே என்று கவலைப்பட்டார். தன் கவலையை மனைவி கமலத்திடம் சொல்லிப் புலம்பினார் முருகன்.

கமலத்திற்கு மகனைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவன் நிச்சயம் பெரிய ஆளாக வருவான் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை. இந்நிலையில்தான் தன் கணவனிடம் அந்த யோசனையைக் கூறினாள்.

“ஏங்க… நம்ம ஹெட்மாஸ்டர் நம்ப புள்ளை மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்காரு. அவரைப் போய் பாருங்கள். ஏதாவது யோசனை சொல்வாரா இருக்கும்”

முருகன் முகத்தில் சின்னத் தெளிவு.

“நானும் அதைத்தான் யோசித்துக்கொண்டு இருந்தேன். நீயும் சரியா சொல்லிட்ட.. இரு இப்பவே போய் அவர கலந்துகிட்டு வருகிறேன்” சொல்லிவிட்டுப் புறப்பட்டார் முருகன்.

ஹெட்மாஸ்டர் தனசேகர் வீட்டில் அமர்ந்து மாலை செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தார்.

“வணக்கம் சார்.. ” தனசேகர் எதிரில் போய்நின்றார் முருகன்.

“வாங்க முருகன்.. இப்படி உட்காருங்கள்.. என்ன விஷயம் சொல்லுங்கள்”

“பையன் படிப்ப பத்தி கொஞ்சம் யோசனை கேக்கலாம்னு வந்தேன்”

“உங்க பையனுக்கு என்ன? அவன் பிறப்பிலே இன்ஜினியராச்சே… ஆனா அவனுக்குச் சரியா வழிகாட்டவேண்டும். இல்லாவிட்டால் திசை மாற வாய்ப்பிருக்கு”’ என்றார்.

“அதுக்குதான் என்ன பண்ணலாம்னு உங்ககிட்ட கேட்க வந்தேன்”

தனசேகர் கண்ணை மூடி ஒரு கணம் யோசித்தார்.

“முருகன் நான் சொல்றத கண்ணை மூடிட்டு கேப்பீங்களா?”

“சொல்லுங்கள் சார்.. அதுக்குதானே இங்க வந்திருக்கிறேன்”

“நம்ம ராஜுவுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புதான் சரியா இருக்கும். அவன் அந்தத் துறையில் ரொம்ப பெரிய ஆளா வருவான். கோயம்புத்தூர் பக்கத்தில அரசம்பாளையத்தில் இருக்கிற எஸ்விஎஸ் காலேஜ்ல அவனைச் சேர்த்திடலாம். ரொம்ப நல்லா வருவான்”

“நிச்சயமா சேர்த்துடலாம். ஆனா, நம்ம மதுரையில நிறைய கல்லூரி இருக்கு.. அங்க என்ன விசேஷமென்று தெரிஞ்சுக்கலாமா சார்” என்றார் முருகன்.

“எல்லா காலேஜ் மாதிரியில்ல எஸ்விஎஸ் காலேஜ். படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறமைக்கும் அங்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். என் மகன் அங்கதான் படிப்ப முடிச்சான். உடனே வேலை கிடைத்தது. பெரிய பெரிய கம்பெனிகள் கேம்பஸ் இண்டர்வியூ வச்சு பசங்கள கொத்திட்டு போயிடுவாங்க. அதுக்காக மட்டும் நான் சொல்லல. உங்க பையன் புதுசா கண்டுபிடிக்கவேண்டும், எதையாவது சாதிக்கவேண்டுமென்று துடிக்கிறான். எஸ்விஎஸ் காலேஜ்ல அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு”

“அப்படியா? ”

”ஆமா முருகன்.. எஸ்விஎஸ் காலேஜ் மெக்கானிக்கல் ஸ்டூடெண்ட்ஸ் புனேயில் நடந்த சர்வதேச பந்தய கார் வடிவமைப்பு ப்ராஜக்டுக்கு பரிசு வாங்கினார்கள். எஸ்விஎஸ் கல்லூரிதான் ராஜுவுக்கு சரியான இடம்”

“அப்புறமென்ன நீங்களே சொன்ன பிறகு நான் தட்டவா போகிறேன். நாளைக்கே கோயம்புத்தூர் கிளம்புறோம்”

மகிழ்ச்சியாகப் புறப்பட்டர் முருகன்.

எஸ்விஎஸ் கல்லூரியில் நடக்கும் கருத்தரங்குகள், சர்வதேச தொழில்நுட்ப மாநாடுகளைப் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

எஸ்.வி.எஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்
பொள்ளாச்சி மெயின் ரோடு, ஜே.பி. நகர்,
அரசம்பாளையம், கோவை, தமிழ் நாடு - 642109
தொலைபேசி எண்: 0422 2619300 – 309
கைப்பேசி எண்: +91 9047049993 / 9047049996
தொலைநகல் எண்: 0422 2619306
மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon