மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து 338 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 344 ரன்களை சேர்த்து தான் இதுவரை அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் Fakhar Zaman-ன் சிறப்பான சதம் மற்றும் Azhar Ali, Mohammad Hafeez ஆகியோரின் அரைசதம் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் உயர உதவியது.

இதுவரை 12 முறை சாம்பியன்ஸ் டிராபியில் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ள பாகிஸ்தான் அணி அதில் 9 முறை வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருப்பதனால், இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

அடுத்ததுchevronRight icon