மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

பாஜக வேட்பாளர் 23ஆம் தேதி அறிவிப்பு: வெங்கையா நாயுடு

பாஜக வேட்பாளர் 23ஆம் தேதி அறிவிப்பு: வெங்கையா நாயுடு

‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் பெயர் 23ஆம் தேதி அறிவிக்கப்படும்’ என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், ஜூலை மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் வேட்பாளரை எந்தக் கட்சியும் அறிவிக்காமல் உள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவரும் பாஜக, 13 மாநிலங்களில் ஆளும்கட்சியாகவும் உள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, சோனியா காந்தி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் மற்றும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கடந்த ஜூன் 7ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில், பாஜக தேர்தல் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாக பாஜக-வின் தேசிய தலைவர் அமித்ஷா ஜூன் 12ஆம் தேதி அறிவித்தார். அக்குழுவில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகிய மூன்று பேர் உள்ளனர் .

இக்குழு அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து ஒத்தக்கருத்துடைய வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் 18-ஆம் தேதி லோக் ஜனசக்தி தலைவர் ராம் பஸ்வானுடன், அக்குழுவில் உள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு டெல்லியில் சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், “ஒத்தக்கருத்துடைய ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவே அனைத்துக் கட்சியையும் சந்தித்து வருகிறோம். மேலும் பாஜக சார்பில் நிறுத்தும் வேட்பாளர் யார் என்று வரும் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon