மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

சிவாஜி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி!

சிவாஜி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி!

1964ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் உருவாகிய படம் ‘நவராத்திரி’. முதன்முறையாக இந்தப் படத்தில் சிவாஜி ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 44 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சாதனையை ‘தசாவதாரம்’ படத்தின் மூலம் கமல் முறியடித்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் 10 கதாபாத்திரங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெற்றார்.

இந்நிலையில் கமல், சிவாஜியை அடுத்து தற்போது விஜய் சேதுபதி எட்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கிவரும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தில் விஜய் சேதுபதி பழங்குடி இனத்தவர் உட்பட எட்டு வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் ஆறுமுகக்குமார் இதுகுறித்து கூறியபோது, “படத்தின் கதை விஜய் சேதுபதியின் பழங்குடி இன கேரக்டரை மையாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் நகரத்தில் இருந்து காட்டுக்கு மாறுகிறது. மேலும் பழங்குடி இனத்தவர்களின் தனித்துவமான சடங்குகள் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி விதவிதமான தோற்றங்களில் தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்களுக்காக அவருக்கு மூன்று ஹேர் ஸ்டைல் கலைஞர்களும், மேக்கப் கலைஞர்களும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் கூறியுள்ளார். விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா கொனிடெலா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துவரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon