மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

சுவிஸ் வங்கிகளைத் தவிர்க்கும் இந்தியர்கள்!

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் தொகை குறைந்துள்ளதாகவும் ஆசிய நாடுகளிலேயே அவர்கள் பணத்தை டெபாசிட் செய்ய விரும்புவதாகவும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பலரும் சட்டவிரோதமாக தங்களின் கருப்புப் பணத்தை சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். இவர்களின் தகவலை பெற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக சுவிஸ் நாட்டுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. இந்நிலையில்,

கருப்புப் பணம் குறித்த தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ளும் வகையில் தானியங்கி தகவல் பரிமாற்ற திட்ட வரைவு அறிவிக்கைக்கு சுவிஸ் பெடரல் கவுன்சி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், இந்தியா மற்றும் 40 நாடுகளுடன் நிதி கணக்கு தொடர்பான விவரங்களைத் தானாகவே பகிர்ந்து கொள்வதை சுவிட்சர்லாந்து உறுதி செய்துள்ளது. முதல் தகவல் தொகுப்பு 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளின் பணத்தை டெபாசிட் செய்வது குறைந்துள்ளதாக சுவிஸ் தனியார் வங்கிகளின் கூட்டமைப்பின் மேலாளர் ஜன் லங்க்லோ தெரிவித்துள்ளார். மேலும், சுவிஸ் வங்கிகளை விட ஆசியாவைச் சேர்ந்த சிங்கப்பூர், ஹாங்காங் நாட்டின் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவே இந்தியர்கள் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தேசிய வங்கியின் தகவலின்படி, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் தொகை 2015 ஆண்டின் முடிவில் ரூ,8,392 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த 2005-06ம் ஆண்டு இது ரூ.23,000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon