மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சென்சார் சர்ட்டிஃபிகேட்: அதிர்ச்சி ஏதும் இல்லை!

சென்சார் சர்ட்டிஃபிகேட்: அதிர்ச்சி ஏதும் இல்லை!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்துள்ள படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

மூன்று விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. அதில் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய தோற்றங்கள் மட்டுமே முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. இதர தோற்றங்களில் உள்ள கதாபாத்திரத்தை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. மேலும், படத்தின் வெளியீடு ஜூன் 23 என அறிவிக்கப்பட்டது. தணிக்கைக்கு இணையம் வழியாக பார்க்கக் கோரியதால் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆகையால், ஜூன் 23ஆம் தேதி வெளியாகுமா என்ற குழப்பம் விநியோகஸ்தர்கள் மத்தியில் நீடித்து வந்தது. இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியதால் வெளியீட்டு பிரச்னை முடிவுக்கு வந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன் இயக்கிய ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்துக்குத் தணிக்கை துறையினர் A சான்றிதழ் அளித்தனர். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர்கள் இதுபோன்ற படங்களை இயக்குவது ஏன் எனக் கேட்டனர். அதற்கு அவர், “எல்லா இயக்குநர்களும் U சர்ட்டிஃபிகேட்டில் படம் எடுத்தால் மக்கள் சலிப்படைந்துவிடுவார்கள். அதனால்தான் நான் A சர்ட்டிஃபிகேட் படம் இயக்குகிறேன். எனவே, சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கும் A சான்றிதழ் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது” என்றார்.

தற்போது ஜூன் 23ஆம் வெளியீடு என்பதால் படக்குழு படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon