மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

விஜய் அரசியலுக்கு வருவாரா? - எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் அரசியலுக்கு வருவாரா? - எஸ்.ஏ.சந்திரசேகர்

அரசியலுக்கு வருவது பற்றி விஜய்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விடுவதும் பிறகு மறைந்துபோவதும் வாடிக்கையாக உள்ளது. மேலும் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-விற்கு விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவளித்தது. அதன்பிறகு தலைவா திரைப்படத்தில் விஜய் அரசியலுக்கு வருவதுபோல சர்ச்சைக்குரிய வசனங்கள் இருந்ததால் படத்திற்கு பல பிரச்னைகள் உருவாகின. மேலும் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரத்துக்கு கோவை வந்த மோடியை, விஜய் சந்தித்துப் பேசினார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பிகைன்ட்வுட்ஸ் விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய விஜய்,' நாடு வல்லரசாவது இருக்கட்டும், முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாகட்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று ஜூன் 17 ஆம் தேதி திரைப்படங்களில் புரட்சிகர கருத்துக்களை கூறியதற்காக அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,' தமிழ் பல்கலைக்கழகம் அளித்துள்ள டாக்டர் பட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை டாக்டர் பட்டம் வாங்கியுள்ளேன்.

விஜய் அரசியலுக்கு வருவாரா அல்லது மாட்டாரா? என்பது பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரே முடிவெடுப்பார். தற்போதைய நிலையில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்துவரும் விஜய்யின் மக்கள் இயக்கத்தை, நிறுவனத் தலைவராக இருந்து, லட்சக்கணக்கான இளைஞர்களை வழிநடத்தி வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon