மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

ஹரித்வாருக்கு சென்ற, சென்னை தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு!

 ஹரித்வாருக்கு சென்ற, சென்னை தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு!

ஆபத்து ஒருவனுக்கு எப்போதும், எங்கேயும் நிகழலாம். அது ஒருவனை தேவையில்லாத பதட்டத்துக்குள்ளும் கொண்டு செல்லலாம். அப்படி இயற்கை மனிதருக்குத் தரும் ஒவ்வொரு விஷயமும் புதிரானவை. அப்படிதான் சமீபத்தில் ஹரித்வாருக்கு சுற்றுலா சென்ற புதுமணத்தம்பதியினர் இருவரின் மீது துப்பாக்கிச் சூடு என்ற துயரசம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

சென்னை ராமாவரத்தைச் சேர்ந்த ஆதித்யா குமாரும், விஜயலட்சுமியும் புதிதாக திருமணம் முடித்த தம்பதியினர். இவர்கள் இருவரும் அவர்களின் பொது நண்பரான ஷ்யாம் தேஜா வழிகாட்டுதல்படி, சென்னையில் இருந்து டெல்லி வந்தனர். பின், ஜோடிகள் இருவரும் ஒரு புல்லட்டிலும், நண்பர் ஷ்யாம் தேஜா மற்றொரு புல்லட்டிலும் என வாடகைக்கு புல்லட்களை எடுத்துக்கொண்டு, ஹரித்வாருக்குப் பயணப்பட்டனர்.

அப்போது நேற்று மாலை (17.06.2017) தங்களின் புல்லட் வாகனத்தில் நான்கு மணியளவில் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது உத்தரப் பிரதேச மாநிலம், முஷாபர் நகர் அருகே, என்.ஹெச் -58 எனும் தேசிய நெடுஞ்சாலைப் பாதையில் வருகையில், திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு ஆதித்யா குமாரின் கழுத்தை பதம் பார்த்தது. இச்சம்பவத்தால் உடனே, ரத்த வெள்ளத்தில் சரிந்தார், ஆதித்யா. அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் கீழேவிழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த 'ஷ்யாம் தேஜா'- டெல்லி போலீஸாருக்குத்தகவல் தெரிவித்தார். பின் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்,தேஜா. இப்போது இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறது, உத்தரப்பிரதேச போலீஸார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon