மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

மலபார் கோல்டு: புதிய கடைகளுக்கு 2000 கோடி முதலீடு!

இந்தியாவின் இரண்டாவது பெரிய நகை வர்த்தக நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்டு மேலும் புதிதாக 80 நகைக் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே இந்தியாவில் 85 கடைகளும், வெளிநாடுகளில் 97 கடைகளும் உள்ளன. அடுத்த மாதம் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் நகை விற்பனை அதிகரிக்கும் என்று இந்த நிறுவனம் கருதுகிறது. இதனால் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மலபார் கோல்டு தலைவர் எம்.பி.அகமது கூறும்போது "விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் புதிதாக 80 கடைகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம், அதில் 40 கடைகள் வளைகுடா நாடுகளிலும், 10 கடைகள் இலங்கை, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிலும், இந்தியாவில் 30 கடைகளும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் வெளிநாட்டில் முதன்முதலில் கடை வைத்தது இலங்கையில் தான்" என்றார்.

மலபார் கோல்டு நிறுவனம், 80 கடைகளுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள ரூ.2000 கோடியில் ரூ.1500 கோடியை வங்கிகள் மூலம் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. ரூ.500 கோடியை மட்டுமே தன்னுடைய இருப்பில் இருந்து முதலீடு செய்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் ரூ.26,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.21,000 கோடி வருவாய் ஈட்டியிருந்தது. இந்நிறுவனம் திருவனந்தபுரத்தில் விரைவில் 'ஷாப்பிங் மால்' ஒன்றையும் திறக்கிறது .

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon