மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

விமானத்தில் பிறந்ததால் வாழ்நாள் முழுவதும் பயணம் இலவசம்!

விமானத்தில் பிறந்ததால் வாழ்நாள் முழுவதும் பயணம் இலவசம்!

ஜெட் ஏர்வேஸ் விமானம் சவுதியில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தபோது பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.

சவுதி அரேபியாவின், டம்மம் என்ற இடத்திலிருந்து கேரளாவுக்கு இன்று ஜூன்-18ஆம் தேதி ஜெட் ஏர்வேஸை சேர்ந்த 9W 569 என்ற விமானம் கிளம்பியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார். கேரளாவை நோக்கி வானில் பறந்து கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவத்திற்காக அவசர சிகிச்சை முன்னிட்டு மும்பையில் தரையிறக்கப்பட்டது.

இருப்பினும் விமானத்திலேயே அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. விமானத்தில் உடன் பயணம் செய்த செவிலியர் ஒருவர் அவருக்குச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பின் மும்பையில் தரையிறக்கப்பட்டதும் உடனடியாக அப்பெண்ணையும், குழந்தையையும் விமான நிலைய அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அந்த விமானம் மீண்டும் கேரளாவுக்கு புறப்பட்டது.

தற்போது இருவரும் நலமாக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும்போது நடுப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில் இலவசமாகப் பயணம் செய்ய இந்த குழந்தைக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon