மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

இறைச்சிக்காக லாரிகளில் கடத்தப்பட்ட 48 மாடுகள் பறிமுதல்!

இறைச்சிக்காக லாரிகளில் கடத்தப்பட்ட 48 மாடுகள் பறிமுதல்!

திருவள்ளூர் அருகே இறைச்சிக்காக ஆந்திராவுக்கு லாரிகளில் கடத்தப்பட்ட 48 மாடுகளை ஆரப்பாக்கம் போலீஸார் இன்று ஜூன் 18ஆம் தேதி பறிமுதல் செய்துள்ளனர்.

அண்மையில், மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய செய்து அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்வது தடுக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு மறைமுகமாக மாட்டிறைச்சியை தடை செய்கிறது என்று கூறி மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் அருகே உள்ள எளாவூரில் ஆரப்பாக்கம் போலீஸார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, மாடுகளை ஏற்றிக்கொண்டுவந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். இந்த லாரிகளில் ஏற்றிவரப்பட்ட 48 மாடுகள் இறைச்சிக்காக ஆந்திராவுக்கு கொண்டுசெல்லப்படுகிறது என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை உள்ளதால், லாரியில் மாடுகளை ஏற்றிவந்த 2 லாரி ஓட்டுநர்களையும் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, லாரியிலிருந்த 48 மாடுகளைக் கைப்பற்றி தேவந்தவாக்கம் கோசாலையில் ஒப்படைத்தனர்.

அண்மையில், திருவள்ளூரில் இருந்து இறைச்சிக்காக கேரளாவுக்கு கடத்தப்பட்ட 59 மாடுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon