மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

கேமராவை பாக். ஆடியன்ஸ் பக்கம் திருப்புங்க! : அப்டேட் குமாரு

கேமராவை பாக். ஆடியன்ஸ் பக்கம் திருப்புங்க! : அப்டேட் குமாரு

இந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்சாச்சே பார்க்காம இருக்க முடியுமா? லீவு கேட்டா ஆபிஸ்ல முடியாதுன்னுட்டாங்க. சரி விடுறா குமாருன்னு.. ஒரு டேப்ல ஹாட்ஸ்டார் ஓப்பன் பண்ணி பார்த்துகிட்டு இருக்கேன். விக்கெட்டு எதும் எடுப்பாங்கன்னு பார்த்தா நம்ம பசங்க ஓவரை கிழிச்சு தொங்க விடுறாங்க. கடைசியா இந்த பிட்ச்ல தான south africa-கூட ஈசியா வின் பண்ணோம்.... இப்போ என்ன ஆச்சி? ஒருவேளை பிட்ச் மாத்தீட்டாங்களா? இத நம்பி பெட் வேற கட்டிடனே...

@iamkarthikeyank

இந்தியன் கோச்சு: சூப்பரு .. பசங்களா மேட்சு முடிஞ்சதும் வழக்கம்போல ad ஷுட்டிங் போயிட்டு ஆறுமாசத்துக்கு பிறவு ஊருக்கு வாங்க

INDvPAK

நக்கல் மன்னன் 2.0

கேமராவ பாக். ஆடியன்ஸ் பக்கம் திருப்புங்க,,

அழகயாவது ரசிப்போம்

@Meenamma Kayal

கிரிக்கெட்லாம் பிக்சிங் என்று சொல்லிவிட்டு சூப்பர் சிங்கர் வெறிக்க வெறிக்க பார்க்கும் கூட்டத்தை என்ன செய்ய!

@CreativeTwitz

இன்னைக்கு இந்தியால எத்தன வீட்ல டிவி உடைய போவுதோ😒

@manipmp

விக்கெட் விழும்போது பார்த்துக்கலாம் டிவி ஆப் பன்னு

தட் போர்வரும் போது பார்த்துக்கலாம் மொமன்ட்

@Kozhiyaar

ஜாக்கிங்கா வாக்கிங்கா என்பது சொல்லிவிடுகிறது நம் வயதை!!!

@palanikannan04

மத்தவங்களோட மரியாதையை ஏற்று

நிமிர்ந்து நடந்ததை கௌரவமாக நினைத்தனர் அன்று

மொபைலை பார்த்துகொண்டு குனிந்து நடப்பதை கௌரவமாக நினைக்கின்றனர் இன்று

@Sandy_Offfl

விக்கெட் இல்ல

Ashwin ball ல சிக்ஸ் வேர

ச்சை னு சேனல் மாத்துனா, சன்டிவி ல தலைவா படம்

என்னடா வாழ்க்கை

@naatupurathan

ஆளைப்பார்த்து எடை போடக்கூடாது என்பதற்கான சமீபத்திய உதாரணம்.,

வெங்காயம்..!!!

"பெரிய"வெங்காயம் கிலோ 20ரூபா,

"சின்ன"வெங்காயம் கிலோ 130ரூபா!

@Kozhiyaar

தன் மகன் சொன்னதை செய்யாத என் அப்பா, என் மகன் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்!!!

@amuduarattai

பெத்தவங்களுக்கு சோறு போடச் சொன்னால், அதைச் செய்யாமல் , செத்தவங்களுக்கு சோறு போடுறேன்னு காக்காக்கு சோறு போடுறாய்ங்க.

@teakkadai1

நியாயப்படி பார்த்தா முல்லை பெரியார் அணையில் பென்னிகுக்குக்கு சிலை வைத்தமாதிரி குற்றாலத்தில் ஆஷ்க்கு சிலை வைக்கணும்.

@saravananucfc

அம்மா என்னை ரசிப்பது வெளிப்படையாக எனக்கே தெரியும். எனக்கு தெரியாததுபோல் அப்பா மறைமுகமாக ரசித்த தருணங்களின் நினைவுகள் அழகு.. #HappyFatherDay

@amuduarattai

ஆட்டோக்கு அடுத்து,சூடு போட்ட மீட்டரில் ஓடுவது நெட் டேட்டா தான்னு நினைக்கிறேன். 2G வேகத்தில் நெட் வேலை செய்தாலும்,4G வேகத்தில் டேட்டா குறையுது

@saravananucfc

சின்ன கோழிக்கூட பிறக்கும் முன்னும் இறந்த பின்னும் பலன் தருது. மனிதர்கள் ஏன் இப்படி இருக்காங்கன்ற கேள்வியை முன் வைத்து இந்த சண்டே ஓடியது.

@krajesh4u

நேத்து - ஜனாதிபதி தேர்தல் பற்றி முதல்வர் எடப்பாடி முடிவு செய்வார் - தம்பிதுரை

இன்று - முதல்வர் மீது வழக்கு பதிய தேர்தல் ஆணையம் பரிந்துரை 😇

@saravananucfc

Justice என்பது just ice (லஞ்சம்) வைத்தாலே கிடைத்துவிடுகிறது!!!

@manithan_yes

ஜன்னலுக்கு முன்பு, குழந்தையாக இரு;

குழந்தைகளுக்கு முன்பு, ஜன்னலாக இரு.

@jeytwits

சொந்தக்காரனுக எல்லாம் சமுத்திரக்கனி மாதிரி..ஒன்னும் பண்ணலைனா கூட நம்மள பார்த்த உடனே ஆக்ரோஷமா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுறானுக

@Villavan Ramadoss

எங்களையும் கோயிலுக்குள்ள விடுங்க..

நீயும் நானும் ஒன்னாடா பிரம்மஹத்தி.

நீங்கல்லாம் ஐரோப்பாலேருந்து வந்ததா டி.என்.ஏ ஆய்வு சொல்லுதாமே??

அதெல்லாம் பிரிட்டிஷ்காரன் சூழ்ச்சிஜி. நீங்களும் நானும் ஒண்ணுக்குள்ள ஒன்னு ஜி. பாரத் மாதாக்கீ ஜெய்யிஜி...

நக்கல் மன்னன் 2.0

அதுசரி... எல்லா மேட்ச்சும் ஒழுங்கா விக்கெட் எடுப்பாங்கன்னு நினைக்குறது மகாமுட்டாள்த்தனம்...

@Kozhiyaar

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை மிரட்டி எழுப்பி பள்ளிக்கு அனுப்புவதையும் வன்முறையில் சேர்க்க வேண்டும்!!!

@saravananucfc

யாரையும் வாழ வைப்பதற்காக தனியாக வாழ தேவையில்லை. யாரையும் தொந்தரவு பன்னாமல் வாழ்வதும் வாழ வைப்பதில் தான் வந்து சேரும்..!

@கருப்பு கருணா

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்று சொல்பவர்கள் யாரும்..தமிழர்கள் அனைவரும் ஒரே தெருவில் தான் வாழ வேண்டும் என ஏன் சொல்வதில்லை : தொல்.திருமாவளவன்

அதெப்படி சொல்வாங்க திருமா...தீட்டுப்பட்ருமோல்லியோ!!

-லாக் ஆஃப்

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon