மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய வாலிபர்!

தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய வாலிபர்!

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பக்தல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ‌ஷபி அர்மார்(30). இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வந்தார். மேலும், இவருக்கு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்தது. அதையடுத்து, ரா மற்றும் உளவுப்பிரிவு போலீசார் இவரைத் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையையடுத்து, இவர் தனது சகோதரருடன் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். கணினி தொழில்நுட்பம் படித்துள்ள இவர் பேஸ்புக் மூலம் இந்தியா, வங்காள தேசம், மற்றும் இலங்கையில் இருக்கும் இளைஞர்களை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களைச் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

உலகம் முழுவதும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வரும்நிலையில், இவர் மீது இன்டர்போல் போலீசாரின் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் விதிக்கப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் முகமது ‌ஷபி அர்மாரை சேர்க்கும்படி அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்ததன் பேரில், அவரது பெயர் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வாஷிங்டனில் இன்று ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதையடுத்து, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்தியர் முகமது ‌ஷபி அர்மாராவார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon