மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

கட்டணம் செலுத்தாத மாணவிகளை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

கட்டணம் செலுத்தாத மாணவிகளை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

பீகாரில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவிகளை அரை நிர்வாணமாகத் தெருவில் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே பெகுசாரை மாவட்டம் கொரியா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு தொழிலாளியின் இரு மகள்கள் பயின்று வருகின்றனர். ஒருவர் நர்சரி வகுப்பிலும், மற்றொருவர் முதலாம் வகுப்பிலும் பயின்று வருகின்றனர். தான் படிக்கவில்லை என்பதால் தன்னுடைய பிள்ளைகளாவது நன்கு படிக்க வேண்டும் என தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார். எனினும் அவர் கல்விக்கட்டணம், புத்தகம் மற்றும் சீருடை கட்டணம் என எதையும் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் உத்தரவின் பேரில் ஆசிரியர் அஞ்சனா குமார் என்பவர் அச்சிறுமிகளின் பள்ளி சீருடைகளை அவிழ்த்தது மட்டுமின்றி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளார். தெருவில் அரை நிர்வாணமாக நடந்து சென்ற சிறுமிகளுக்கு ஒருவர் உடைக் கொடுத்து உதவியுள்ளார்.

இந்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பாகியுள்ளது. இதுகுறித்து இரு சிறுமிகளின் தந்தை குமார் ஷா என்பவர் முசாபில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளி முதல்வர் முகேஷ் மற்றும் ஆசிரியை அஞ்சனா குமார் இருவரையும் இன்று ஜூன்-18 ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

பள்ளியில் கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டும் நிர்வாகம் அவகாசம் கொடுக்கவில்லை. என்று குமார் ஷா கூறியுள்ளார். சீருடைக்கு பணம் செலுத்தாத உங்களுக்குச் சீருடை எதற்கு எனக் கூறி மாணவிகளின் ஆடையை ஆசிரியை கழட்டியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon