மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

இந்தியாவில் 149 தபால் பாஸ்போர்ட் சேவை மையங்கள்!

 இந்தியாவில் 149 தபால்  பாஸ்போர்ட் சேவை மையங்கள்!

இனிமேல், நீங்கள் பாஸ்போர்ட் எடுக்க வெகுதூரங்களுக்குச் சென்று அலைய வேண்டாம். மத்திய அரசாங்கமே ஒவ்வொரு 50 கிமீ-க்கு பாஸ்போர்ட் மையங்களை அமைக்கவுள்ளது. அதுவும் தபால் நிலையங்களிலேயே இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சமீபத்தில் கூறுகையில், “நாடு முழுவதும் தபால் நிலையங்களில் 149 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தில் முதல்கட்டமாக, 86 பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்பு வடகிழக்கு மாகாணங்களில் முன்பே, 16 பாஸ்போர்ட் சேவை மையங்களை எங்களது பாரதிய ஜனதா அரசு அமைத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் மொத்தமாக 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் இருந்து வருகின்றன. இனி வரக்கூடிய ஒவ்வொரு 50 கி.மீ-க்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க வேண்டுமென்பது மத்திய அரசின் லட்சியம்” என்றார்.

இதனால், இதுவரை பாஸ்போர்ட் எடுப்பதற்குப் பிரச்னையாகயிருந்த, தூரம் மற்றும் காலம் ஆகியவை சேமிக்கப்படும் என்றால் மிகையல்ல.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon