மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

பெற்றோருக்காக காதல் தியாகிகள் ஆகும் பெண்கள்!

பெற்றோருக்காக காதல் தியாகிகள் ஆகும் பெண்கள்!

பெரும்பாலான பெண்கள் தங்கள் காதலை, பெற்றோர்களுக்காக மறைத்துக்கொள்கின்றனர். இன்றும் இச்சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. இந்நிலையில் ஒரு தீர்ப்பு அளிக்கும் சமயத்தில் பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

1995ஆம் ஆண்டு, இரண்டு தம்பதிகள் பெற்றோர்களுக்களின் எதிர்ப்பை மீறி, காதல் திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளனர். பின், பெற்றோர்களின் எதிர்ப்பு வலுக்கவே, திருமணம் முடித்தபிறகும் சேர்ந்து வாழமுடியாமல் தவித்து இருக்கின்றனர். பின் தற்கொலை செய்துகொள்ள தம்பதிகள் இருவரும் முயற்சித்தபோது, காதல் மனைவி மட்டும் விஷம் அதிகமாக குடித்ததால் இறந்திருக்கிறார். விஷம் குறைவாக குடித்து, தற்கொலைக்கு முயன்ற காதலன் பிழைத்திருக்கிறார்.

இதனால் அந்தக்காதலன் மீது தற்கொலைக்கு முயற்சித்தாகவும், அப்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் கூறி, தொடரப்பட்ட வழக்கில், அந்த காதல் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

இச்சம்பவம் வலியைத் தந்தாலும்,தண்டனை சட்டப்பூர்வமாகவே வழங்கப்பட்டிருக்கிறது என்கின்றனர், நீதியரசர் குழுவினர். மேலும் பெற்றோர்களுக்காக பெரும்பாலான பெண்கள் தங்கள், காதலை மறைத்து தியாகிகள் ஆகுகின்றனர் எனக்குறிப்பிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்.

அதேபோல் பெண்கள் தங்கள் காதலை, தங்கள் விருப்பத்தையும் மீறி தியாகம் செய்கின்றனர் எனச்சுட்டிக்காட்டியுள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon