மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

ஐஸ்வர்யா ராயைக் கிண்டலடித்த கத்ரீனா கைஃப்

ஐஸ்வர்யா ராயைக் கிண்டலடித்த கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் நடிகை கத்ரீனா கைஃபும் பல வருடமாக காதலித்ததோடு ஒரே வீட்டில் வாழ்ந்தும் வந்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது பிரிந்துவிட்டனர். சமீபத்தில் ஃபேஸ்புக் லைவ்வில் ரன்பிரும், கத்ரீனாவும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராயை நரி என்று கூறியுள்ளார்.

கத்ரீனா கைஃபும் ரன்பிர் கபூரும் காதலர்களாக இருந்தபோது தொடங்கப்பட்ட படம் ‘ஜக்கா ஜசூஸ்’. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இருவருக்கும் பிரச்னையாகி பிரிந்துவிட்டனர். இருப்பினும் தங்கள் சொந்தப் பிரச்னையை விட்டுவிட்டு படத்தை முடித்துக்கொடுத்துள்ளனர். ‘ஜக்கா ஜசூஸ்’ பட விளம்பர நிகழ்ச்சிகளில் கத்ரீனாவும் ரன்பிரும் சேர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர். இருவரும் பேசிக்கொள்ளும்விதத்தைப் பார்த்தால் மீண்டும் காதலை புதுப்பிப்பார்கள் போல தெரிகிறது.

இந்நிகழ்ச்சியில் ரன்பிர் ஒரு வார்த்தை கூறியதும் தனது நினைவுக்குவரும் நபரை கத்ரீனா தெரிவிக்க வேண்டும். பல்வேறு கேள்விகளுக்குப் பின்பு, ரன்பிர் கபூர் ‘நரி’ என்ற வார்த்தையைக் கூறியதும் கத்ரீனா கொஞ்சம்கூட யோசிக்காமல் ‘ஐஸ்வர்யா ராய் பச்சன்’ என்று தெரிவித்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒருவேளை ஐஸ்வர்யா ராயின் கண்கள் அப்படியிருப்பதால் சொல்லியிருப்பாரோ என்று யூகிக்க முடிகிறது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon