மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

அதிகரித்துவரும் மொபைல் இணையப் பயன்பாடு!

அதிகரித்துவரும் மொபைல் இணையப் பயன்பாடு!

இந்தியாவில் செல்போன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் பேச மட்டுமே பயன்பட்ட செல்போன்கள் இன்று பல்வேறு வகையில் பயன்படுகின்றன. செல்போன் இல்லாத ஒருநாள் வாழ்க்கையே பலருக்கு இயலாது. அந்த அளவுக்கு முக்கியமான முதன்மை தொடர்பு சாதனமாக செல்போன் விளங்குகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சியும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் செல்போன் வழியாக இணையதளம் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தனிநபர் மொபைல் டேட்டா (இணையதளம்) பயன்பாடு 142 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் சனிக்கிழமை தனது ட்விட்டர் பதிவில், கடந்த மூன்று ஆண்டுகளாக (2014-17) இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 142 சதவிகிதம் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இணையதளத்தைப் பயன்படுத்துவர்களின் ஆன்லைன் வாயிலான வங்கி பரிவர்த்தனையும் 17 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதுமட்டுமின்றி டிஜிட்டல் வாலட் பரிவர்த்தனை அனைவரும் வியக்கும்வகையில் 200 மடங்கு உயர்ந்துள்ளதாக அமிதாப் காந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon