மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

திமுக வெளிநடப்பு செய்வது சரியில்லை: தமிழிசை

திமுக வெளிநடப்பு செய்வது சரியில்லை: தமிழிசை

‘வீடியோ விவகாரத்தைக் காரணம் காட்டி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது முறையானதாக இல்லை’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அரசைக் கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். ஒரு வீடியோவை வைத்து ஆட்சியைக் கலைக்க முடியாது. ஜனநாயக முறைப்படி ஒரு வீடியோவை வைத்து ஆட்சியைக் கலைக்க முடியும் என்றால், நீரா ராடியா விவகாரத்தை வைத்து மன்மோகன் சிங் ஆட்சியைக் கலைத்திருக்க வேண்டும். அதற்காக அதிமுக எம்.எல்.ஏ-க்களின் குற்றங்களை நான் நியாயப்படுத்தவில்லை.

இந்நிலையில், இக்குற்றங்களுக்காக நீதிமன்றம் மற்றும் அதற்கென தனி விசாரனை உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று சபாநாயகர் தெளிவாகக் கூறியும், எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சிடி-யைக் காட்டி திமுக-வினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இவ்வாறு திமுக-வினர் செயல்படுவது சரியில்லை. ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கி இவ்விவகாரத்தைச் சட்டபூர்வமாக அணுகலாம். முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon