மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

காரிப் பருவம்: பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு!

காரிப் பருவம்: பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு!

நடப்பு காரிப் பருவத்தில் ஜூன் 16ஆம் தேதி நிலவரப்படி, பயிர்கள் சாகுபடி பரப்பளவு 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் காரிப், ராபி ஆகிய இரண்டு பருவங்களில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அக்டோபர் - மார்ச் ராபி பருவமாகும். ஜூன் – அக்டோபர் காரிப் பருவமாகும். காரிப் பருவத்தில் நெல் உற்பத்தியும் ராபி பருவத்தில் கோதுமை உற்பத்தியும் அதிகமாக இருக்கும்.

தற்போது நடப்பு காரிப் பருவத்தில் 10.62 கோடி ஹெக்டேரில் பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 16ஆம் தேதி நிலவரப்படி, பயிர்கள் சாகுபடி பரப்பளவு 93 லட்சம் ஹெக்டேராக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இது 88 லட்சம் ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பயிர்கள் சாகுபடி பரப்பளவு 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பருத்தி சாகுபடி பரப்பளவு என்பது 36 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சிறுதானியங்கள் சாகுபடி பரப்பளவு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேவேளையில், நெல் சாகுபடி பரப்பளவு 2 சதவிகிதம் குறைந்து 9.22 லட்சம் ஹெக்டேராக உள்ளது. பருப்பு சாகுபடி பரப்பளவு 39 சதவிகிதம் குறைந்து 2.22 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளது. எண்ணெய் வித்துகள் சாகுபடி பரப்பளவு 29 சதவிகிதம் குறைந்து 1.88 லட்சம் ஹெக்டேராக உள்ளது.

கரும்பு சாகுபடி பரப்பளவு 6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது 47,52 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இந்திய மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) வேளாண் துறையின் பங்களிப்பு என்பது 15 சதவிகிதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon