மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

விரைவில் குடியரசு தலைவர் வேட்பாளர்: அமித்ஷா

விரைவில் குடியரசு தலைவர் வேட்பாளர்: அமித்ஷா

குடியரசு தலைவர் தேர்தலுக்கான பாஜக தரப்பு வேட்பாளர் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

வரும் ஜூலை 17ஆம் தேதி குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான பாஜக தரப்பு வேட்பாளர் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுக்கவே மத்திய அரசு விரும்புகிறது. அதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மத்திய அமைச்சர்களான அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோர் அடங்கிய பாஜக குழு சந்தித்து ஆலோசித்து வருகிறது. எதிர்க்கட்சிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், பாஜக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி சில பெயர்கள் இறுதி செய்யப்படும். பிறகு அந்தப் பெயர்கள் பற்றி எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் தரப்பில் இதுவரை எந்தவொரு நபரும் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. சில ஊடகங்கள் அவர்களாகவே சில நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகின்றன” என அவர் கூறினார்.

காஷ்மீரில் ஆறு காவல்துறையினர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது அவர், “நீண்டகாலமாக காஷ்மீரில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வருகிறது. அதற்கு பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்” என அவர் கூறினார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon